Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா நிதி 2வது தவணை எப்போது, ஊரடங்கு நீடிப்பா?

கொரோனா தொற்றாலும், கொரோனா பரவலை கட்டுப் படுத்த அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. மக்களின் அன்றாட தேவை சமாளிக்கும் வகையில் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் முதல் தவணையாக தலா ரூ 2 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் முலம் வழங்கப் பட்டது. 2வது தவணை ஜூன் 3ம் தேதி வழங்கப்படவுள்ள தாக தமிழக அரசு தெரிவித் துள்ளது.
தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் சென்னையில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அத்துடன் 13 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஜூன் 3-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
பிற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி இத்திட்டம் செயல் பாட்டுக்கு வர உள்ளது.
இதற்கிடையில் முழுஊரடங்கு நீடிக்கப்படுமா என்றதற்கு பதில் அளித்த முதல்வர்.’தேவைப்பட்டால் முழு ஊரடங்கு பற்றி பரிசீலிக்கப்படும், தற்போது விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் ஓரளவுக்கு தொற்று குறைந்திருக்கிறது’ என்றார்.

Related posts

பெட்ரோல் விலை குறைப்பு மு. க. ஸ்டாலின் அறிவிப்பு: அசத்தல் பட்ஜெட்

Jai Chandran

நேரடி தமிழ் படத்தில் நடிக்க தயார்: ஜூனியர் என் டி ஆர் உறுதி

Jai Chandran

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend