Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக் மறைவு: விக்ரம், ராஜ்கிரண் இரங்கல்..

நடிகர் விவேக் காலமானார். அவரது உடல் விருகம்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்ய்யப்பட்டது. விவேக் மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. ந்டிகர் ராஜ்கிர்ண் வெளியிட்ட இரங்கல்:

தம்பி விவேக்,

அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,

அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்

எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது…

 

இப்பொழுது,

தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ

எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது…

என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது…

இவ்வாறு ராஜ்கிரண் கூறி உள்ளார்.

நடிகர் விக்ரம் வெளியிட்ட இரங்கல்:

என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு விக்ரம் தெரிவித்துள்ளார்.

Related posts

எக்ஸாம் (வெப் சீரிஸ் விமர்சனம் )

Jai Chandran

‘YUDDHA KAANDAM ’ Internationally Recognised and Winning Awards

Jai Chandran

லோக்கல் சரக்கு (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend