Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் பெயரில் மோசடி..

மாயா மற்றும் கேம் ஓவர் பட இயக்குனர் அஸ்வின் சரவண வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.

நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எந்தவிதமான நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர்/நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள். மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகாரளிப்பதற்காக எனது வழக்கறிஞர் குழுவிடம் நான் தொடர்பு கொண்டுள்ளேன்.

இவ்வாறு  அஷ்வின் சரவணன் கூறி உள்ளார்.

Related posts

SaranyaRavichandran Stills

Jai Chandran

சூர்யாவின் ‘கங்குவா’ பட 2வது வெறிப் பார்வை

Jai Chandran

மெய்ப்பட செய் இசை வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend