Trending Cinemas Now
Uncategorized

ஹைக்கூ (பட விமர்சனம்)

படம்: ஹைக்கூ)

நடிப்பு: ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ்

தயாரிப்பு:விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து

இசை: சித்துகுமார்

ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி

இயக்கம்: யுவராஜ் சின்னசாமி

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் ஏ நாசர்

கதை:  பெண்கள் கல்லூரியில் ஒரே மாணவனாக சேர்கிறான் மனோ  (ஏகன்). அதே கல்லூரியில் படிக்கும் கொடி (ஸ்ரீதேவி ) உடன் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த காதல் காணாமல் போகிறது. காலம் கடக்கிறது மனோ நிறுவனத்தில் வேலை செய்கிறான்  அங்கு  நிவேதா என்ற பெண்ணுடன் ஒரு காதல் மலர்கிறது. அந்த காதலும் காணாமல் போகும் சூழல் ஏற்படுகிறது. காதல் சிறையில் சிக்கி தவிக்கும் மனோ என்ன முடிவு எடுக்கிறான் என்பது தான் கிளைமாக்ஸ்.

. புதுமுக ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் ஏகன்  கல்லூரி மாணவன் வருடத்திற்கு பொருத்தமாக இருப்பதுடன் அந்த கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நபராக இருக்கிறார்.  ஹீரோ என்றவுடன் ஆக்சன் அதிரடி என்றெல்லாம் முதல் படத்திலேயே அலட்டிக் கொள்ளாமல்  கதாபாத்திரம் என்ன? எந்த அளவுக்கு நடிக்க வேண்டும்? என்ற மீட்டர் எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டு நடித்திருப்பது தான் அவரை ஏற்றுக் கொள்ள வைக்கிறது..

நடிப்பில் எவ்வளவு நிதானமும் பொறுமையும் காட்டியிருக்கிறாரோ வசனம் பேசுவதிலும் அவ்வளவு தெளிவும் உச்சரிப்பு ஈடுபாடும் காட்டி இருப்பது ஏகனுக்கு இந்த கதாபாத்திரத்திற்கான உயிரோட்டத்தை கண்முன் காட்டி இருக்கிறது. ஆனால் இதுவே  அவரது ஸ்டைலாக அடுத்தடுத்து வரும் படங்களிலும் இருந்துவிடக் கூடாது. மாறுபட்ட நடிப்பும் கதாபாத்திரம் தான் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதை அவர் மனதில் கொள்வது நல்லது.

ஏகன், ஸ்ரீதேவி காதல்  ஜென்சி காதலை கொண்டதாக இருந்தாலும் 90ஸ் காதலும் பின்னிப் பிணைந்து இருப்பது  காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.  அவர் வேறு ஜாதி இவர் வேறு ஜாதி என்பதால் இந்த கதை ஒரு ஆணவ கொலை கதையாக மாறிவிடுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அதில் ஒரு திருப்பத்தை இயக்குனர் வைத்து எதற்காக இவர்களின் காதல் பிரிகிறது என்பதை கிளைமாக்ஸ் நெருக்கத்தில்  ஓபன் செய்யும்போது… பல இளைஞர்கள் ஏன் இன்னும் சொல்லப் போனால் இளைஞிகள் கூட தங்களின் காதல் முடிவுக்கு என்ன காரணம் என்பதை மனதார உணர்வார்கள். அப்படி உணர்ந்து பிரிந்த ஒரு காதல் ஜோடி ஆவது ஒன்று சேர்ந்தால்  அதுதான் இந்த கதைக்கு கிடைக்கும் மிகப்பெரிய  பெரிய வெற்றியாக இருக்கும்.

ஈகோ, பொசசிவ்னஸ்  எதார்த்தமான காதலுக்கு கூட எவ்வளவு எதிரிகளாக இருக்கிறது என்பதை மையப்படுத்தி இருப்பது தான் இந்த முப்பரிமான காதல் கதையின் மையக்கரு.

கொடி நடித்திருக்கும் ஸ்ரீதேவி  வலியைச் சென்று ஏகனிடம் காதலை வளர்த்துக் கொண்டாலும் தனக்கென ஒரு செல்ப் ரெஸ்பெக்ட்  எதிர்பார்ப்பது எல்லா பெண்களிடம் உள்ள இயல்பு. அதை இயல்பு இரண்டாவது காதல் மலரும் ஃபெமினா ஜார்ஜ் காதலிலும் எதிரொளிப்பது  சில சில காதலர்கள் காதலியிடமிருந்து இருந்து  புரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்.

ஃபெமினா ஜார்ஜ் இரண்டாம் பாதி முழுக்க ஆக்கிரமித்தாலும்  நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை காட்டி வாசித்து இருக்கிறார்.

படத்தில் இன்னும் பலர் நடித்திருந்தாலும் அவர்கள் எல்லோருமே அந்தந்த பாத்திரங்களாக வந்து செல்வது கதையை திசை மாற்றாமல் கொண்டு செல்ல உதவுகிறது.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து  ஆகியோர் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் தனது காதல் சித்து விளையாட்டு விளையாடி இருக்கிறார்.

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு கண்களை திரையில் கட்டி போட்டு விடுகிறது.

இயக்குனர் யுவராஜ் சின்னசாமி  காதலில்  என்ன புதிதாக சொல்லிவிட போகிறார்  என்ற எண்ணத்தில் தான் தொடக்க காட்சிகள் நகர்கின்றன ஆனால்  காதலின் உள்ளார்ந்த ரகசியத்தை ஒன்றுக்கு இரண்டு முறை இந்த படத்தில் சூத்திரமாக கையாண்டு இருப்பது வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும். அது சமயம் இன்னும் கூட ஐந்து அல்லது பத்து நிமிட காட்சிகள் குறைத்தால்  விறுவிறுப்பு அதிகரிக்கும்

ஹைக்கூ –  காதல் வெற்றிக்கான சூத்திரம்

 

 

 

 

 

.

 

 

 

 

Related posts

Jai Chandran

Shah Rukh Khan’s Jawan collecting 129.6 Cr. gross on the first day!

Jai Chandran

tmja kavitha diwali malar 2025

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend