Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மதுரையில் “இசையென்றால் இளையராஜா

நாய்ஸ்   அண்ட்  கிரைன்ஸ் (NOISE AND GRAINS ) நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , “இசையென்றால் இளையராஜா ” எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில் நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நாய்ஸ்   அண்ட்  கிரைன்ஸ்    நிறுவனம், இசைப்புயல் AR ரஹ்மான் அவர்களின் “நெஞ்சே எழு”, பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின்   ஆல் ல்வ் நோ ஹேட் (ALL LOVE NO HATE )” இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரனின் “மடை திறந்து” , மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி  மற்றும் கே ஜே. யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் வாய்ஸ் ஆப்   லெஜெண்ட்” , பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ் , விஜயபிரகாஷ் அவர்களின் “மடை திறந்து” , ராக் ஸ்டார் அனிருத் லவ் இன் சிங்கப்பூர்  எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின், மனதை வருடிச்செல்ல வைத்தது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து “நம்ம ஊர் திருவிழா” நிகழ்ச்சியும் மற்றும் பிரமாண்டமாய் “லெஜெண்ட்” திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சி களையும் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

BoyapatiRAPO film launched with Pooja ceremony

Jai Chandran

அகடு (பட விமர்சனம்)

Jai Chandran

நகர் புற உள்ளாட்சி தேர்தல் முடிவு: கட்சி தலைவர்கள் கருத்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend