Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரத யாத்திரையை நிறுத்தச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாடடேன் திவ்யா சத்யராஜ்‌ அதிரடி

தமிழ் நாட்டில் கொரோனா தொற்று நேரத்தில் ரத யாத்திரை நடத்தக் கூடாது என்றதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது. மக்கள் உயிர் தான் முக்கியம் என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌. இவர்‌
கொரோனா நேரத்தில்‌ தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை
இலவசமாக வழங்க ”மகிழ்மதி” என்ற இயக்கத் தை ஆரம்பித்திருக்கிறார்‌.

சில வருடங்களுக்கு முன்‌ மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகள்‌
பற்றியும்‌ நீட்‌ தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ்‌ பிரதமர்‌ மோடிக்கு எழுதிய
கடிதம்‌ சமூக வலைதளங் களில்‌ வைரல்‌ ஆனது. இப்பொழுது ரத
யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்‌
வைத்த கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌.
இதுபற்றி அவர் கூறியதாவது:
கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு
கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது. கொரோன நேரத்தில்‌ ரத
யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ் மக்களின்‌ உடல்‌
நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து
நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரை யை எதிர்க்கிறேன்‌. மதத்தை
வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌
மீதும்‌ இல்லாதது வருத்த மாக இருக்கிறது.

ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌
இல்லை.
இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.

Related posts

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் ‘ஜீனி’

Jai Chandran

சத்யராஜின் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் ஆக 16 முதல் பார்க்கலாம்

Jai Chandran

‘ G N Anbuchezhiyan to release ‘The Legend’ starring Legend Saravanan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend