படம்: மாய பிம்பம்
நடிப்பு: ஜானகி, ஆகாஷ், ஹரி, ருத்ரன், ராஜேஷ், அருண்குமார்
தயாரிப்பு: கே ஜே சுரேந்தர்
இசை: நந்தா
ஒளிப்பதிவு: எட்வின் சாகே
இயக்கம்: கே ஜே சுரேந்தர்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
ஆகாஷ் உள்ளிட்ட நான்கு இளவட்ட நண்பர்கள் எப்பொழுதும் சைட் அடிப்பது, லவ் செய்வது, கரெக்ட் செய்வது என்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆகாஷுக்கு நர்ஸ் பெண்ணுடன் காதல் மலர்கிறது. ஆனால் உடன் இருக்கும் நண்பர்கள், ” அவள் உன் இஷ்டத்துக்கு கட்டுப்படுவாள் நீ அவளை அழைத்துப் பார்” என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். இளவட்ட வயது வேகத்தில் அந்தப் பெண்ணை பலவந்த படுத்தப்பார்க்கிறார் ஆகாஷ். ஆனால் உண்மையில் ஆகாஷ் மீது காதல் கொண்ட அந்த பெண் என்ன செய்கிறார்? அதன் பிறகு நடப்பது என்ன ? என்பதற்கு கிளைமாக்ஸ் எதிர்பார்க்காத பதில் அளிக்கிறது.
2005 காலகட்டங்களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது மாய பிம்பம்.
படத்தின் டைட்டிலை கேட்டால் ஏதோ மந்திரவாதி படம் போல் தெரிகிறது ஆனால் இது ஒரு காதல் கதை.
நான்கு நண்பர்கள் சேர்ந்தாலே எதைப் பற்றி பேசுவார்கள் என்று காட்சி ஆரம்பித்து ஆகாஷ் உள்ளிட்ட நண்பர்கள் அடிக்கும் லூட்டி, கமெண்ட் போன்றவற்றை ரசிக்க முடிகிறது. ஆனால் எல்லா பெண்களுமே கூப்பிட்டால் வருவார்கள் என்பது போல் சித்தரிப்பது மனதை நெருடுகிறது.
கதாநாயகி ஜானகி மூக்கும் முழிமாக அழகாக இருக்கிறார். ஆகாஷ் மீது காதல் கொண்டு அவரையே சுற்றி சுற்றி வரும் ஜானகி ஒரு கட்டத்தில் தன் காதலை ஆகாஷிடம் சொல்ல முயலும் நிலையில் எதிர்பார்க்காமல் நடக்கும் அந்த சம்பவம் கதையை திருப்பி போடுகிறது.
ஆகாஷ் நண்பர்களாக நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இது நண்பர்களுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும் ஒரு படிப்பினையை கண்டிப்பாக இளவட்டங்களுக்கு சொல்லித் தரும்.
நந்தா இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது.
எட்வின் சாகே ஒளிப்பதிவு 2005 கால கட்டங்களை கண்முன் நிறுத்துகிறது.

90ஸ் காலகட்ட கதையாக இருந்தாலும் காதல் என்றைக்கும் புனிதமானது என்பதை இயக்குனர் கே ஜே சுரேந்தர் சொல்லி இருப்பது நெஞ்சில் பதியும் கல்வெட்டு.
மாய பிம்பம் – உருக்கமான காதல் சுவடு.

Review By K.Jayachandhiran
Trending cinemas now.com
