படம்: பிளாக் மெயில்
நடிப்பு: ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, முத்துக்குமார், ரெட்டின் கிங்சிலி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா இசை
தயாரிப்பு: ஜெயக்கொடி அமல்ராஜ்
இசை: சாம் சி எஸ்.
ஒளிப்பதிவு: கோகுல் பினாய்
இயக்கம்: மு மாறன்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்
குடோனில் இருந்து மருந்துகளை எடுத்துச்சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலை பார்க்கிறான் மணி (ஜிவி பிரகாஷ்) . ஒருமுறை அவன் கொண்டு சென்ற வேன் திருடு போகிறது. அதில் பல லட்சம் மதிப்புள்ள போதை மருந்து வைத்திருந்ததாகவும் அதற்கான பணத்தை நீதான் தரவேண்டும் என்று முதலாளி கோபமடைந்து மணியின் காதலியை கடத்துகிறார்..இதற்கிடையில் ஐடி நிறுவன அதிகாரியின் (ஸ்ரீகாந்த்) குழந்தையை யாரோ கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்த மணி குழந்தையை தான்தான் கடத்தி வைத்திருப்பதாக கூறி அவரை பிளாக்மெயில் செய்து பணத்தை வாங்கி அந்த பணத்தை தன் முதலாளியிடம் கொடுத்து காதலியை மீட்க எண்ணுகிறான்.. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைகிறது.காதலியை மீட்க போராடும் மணி, குழந்தையை காணாமல் தவிக்கும் ஐடி அதிகாரி , முன்னாள் காதலனிடம் சிக்கி தவிக்கும் ஐடி அதிகாரி மனைவி என முக்கோண பரிமாணத்தில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஹீரோ வேடம் என்பதை விட கதையின் லீடு கதாபாத்திரம் என்பதுதான் சரியாக இருக்கும்.
தன் மீது திருட்டுப்பழி விழுந்ததும் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வதும் தான் எந்த தவறும் செய்யவில்லை ஆனாலும் காதலியை காப்பாற்ற ஏமாற்றி ஆக வேண்டும் என்ற நிலையில் அவர் ஸ்ரீகாந்திடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதும் ஆனால் அந்த திட்டம் தோல்வியானதும் காதலியை காப்பாற்ற வேறு வழி தேடி திணறுவதுமாக ஒரு அப்பாவி தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஆக்ஷன் காட்சிகள் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் ஜி வி பிரகாசுக்கு இது தீனி போடும் கதாபாத்திரம் அல்ல அவரிடம் ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு இந்த படத்தில் நிறைவேறவில்லை.
பிந்து மாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கும் அவர் தன் மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயல்வதும், ‘ என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே’ என்று முன்னாள் காதலனிடம் கண்ணீர்விட்டு கதறுவதுமாக உருக்கம் காட்டுகிறார்.
போதை மருத்து கடத்தல்காரர் முத்துக்குமார், அவரது அடியாள் ரெட்டின் கிங்சிலி இருவரும் சேர்ந்து புதிய காம்பினேஷனில் காமெடி முயற்சித்திருக்கிறார்கள், சில இடங்களில் சிரிப்பு வருகிறது.
கதாநாயகி தேஜு அஸ்வினிக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை ஒரு சீனில் கண்ணில் காட்டுகிறார்கள் அதே சீனில் அவரை கடத்தி விடுகிறார்கள். இப்படி இருந்தால் என்ன நடிப்பை வெளிக்காட்டுவார்?
ஸ்ரீகாந்த், லிங்கா ரமேஷ் திலக் கதையின் நீளத்தை அதிகரிக்க பயன்பட்டிருக்கிறார்கள்.
ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.
சாம் சி எஸ். இசைiயில் மெலடிகள் தென்றலாக வீசுகிறது. டி இமான் இசையில் ஒத்துக்கிறியா. பாடல் கால்களை ஆட்டம் போட வைக்கிறது
கோகுல் பினாய் ஒளிப்பதிவு கதைக்குப் பொருத்தம்.
மு மாறன் கிரைம் கதையை யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற ரேஞ்சில் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார். ஆனாலும் காட்சிகளில் நிறைய டிவிட்டுகள் கொடுத்து கடைசி வரை இருக்கையில் அமர வைக்கிறார்.
பிளாக் மெயில் – காமெடி கலந்த கிரைம் திரில்லர்
Review By,
K Jayavchandhiran
Trendingcinemasnow.com
.