Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள் பொது செய்திகள்

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்

‘இன்று மார்ச் 20ல்  நீதி கிடைத்தது ‘

பு துடெல்லி, மார்ச் 20:

டெல்லி மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்த 4 இளைஞர்களுக்கு இன்று  அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வந்தபோது ஓடும் பஸ்சிலேயே அவரை பலாத்காரம் செய்து  கொலை செய்து ரோடில் தூக்கி வீசப் பட்டார். கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண் டும் என்று அப்போது இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக  முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 8 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் டெல்லி விசாரணை கோர்ட்டு விசாரணை செய்து 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.  இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.
ஜனாதிபதிக்கு கருணை மனு, சுப்ரீம் கோர்டில் அப்பீல் என
தண்டனையிலிருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகளை 4 கொலையாளிகளும் மேற் கொண்டனர். 3 முறை தூக்கு தண்டனை தள்ளிவைக்கப் பட்டது. இதற்கு நிர்பயா தாயார் கடும் கண்டனம் தெரிவித்தார். என் மகள் கொலைக்கு நீதி வழங்க வேண்டும என்று கண்ணீர் மல்க கூறினார். இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார். கோர்ட்டும் குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து 4 பேருக்கும் 20ம் (இன்று ) தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று அதிகாலை 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நிர்பயா கொலையாளிகள் தூக்குநிறைவேற்றப்பட்டதையடுத்து நீதி நிலைநாட்டப்பட்டி ருப்பதாக நிர்பாய தாயார் தெரிவித்திருக்கிறார். பெண்கள்அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிரதமர் மோடி கருத்து :

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கவுரவம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

#Nirbhaya convicts hanged today

Related posts

மார்டன் லவ், காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை: பாரதிராஜா பேச்சு

Jai Chandran

பைரதி ரணகாளின் அதிரடி பயணம் SunNXT-ல்

Jai Chandran

பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend