Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி, “நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன்.
இப்போது படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் மகத்தான வரவேற்பைப் பார்க்கும்போது எங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. ஜிப்ரானைப் பொறுத்தவரை, அவர் மிகச் சிறந்த இசையை தருவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தனித்துவம் மிக்க மிகச் சரியான குரலைத் தேர்வு செய்து பாட வைத்து பாடலை முழுமையுறச் செய்கிறார். இந்த வகையில் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ மேடம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் ஆல்பத்தின் வெற்றிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. பிரதான வேடங்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால் பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது” என்றார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கிறார். ஹரீஸ் கல்யாண், ரெபோ மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஷி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்த நகைச்சுவை கலந்த காதல் சித்திரத்தில் ரேணுகா, முனீஷ்காந்த் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் இந்த மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரை இடப்பட உள்ளது.

Related posts

ரஞ்சித் “இறுதிமுயற்சி” ஷூட்டிங் நிறைவு

Jai Chandran

நடிகர் பிரசாந்த் கிறிஸ்துமஸ் இசை வீடியோ வைரல்

Jai Chandran

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” படம் பூஜையுடன் தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend