ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :
கடந்த வாரம் தாங்கள் படப்பிடிப்புற்கு பிந்தய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் அதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது பல கோடி ரூபாய் புழங்கும் தமிழ் திரையுலகில் அத்தனை கோடி ரூபாயும் முடங்கிப்போய் உள்ளது. தொழிலாளர் தோழர்கள் வேலை வாய்ப் பின்றி தவித்து வருகின்றன்ர். ஆகவே முதல்வர் அவர்கள் நிலைமையை தாயுள்ளத்தோடு பரிசீலித்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாலிவுட் திரையு லகில் பாதுகாப்பு உடைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து படப் பிடிப்பு தொடங்கி நடை பெறுவதுபோல இங்கும் தாங்கள் திரைப்பட தயாரிப்பாளர் களும், திரைப்பட தொழிலாளர்களும் படப்பிடிப்புகளை மீண்டும் துவக்கி நடத்துவதற்கு ஆணை பிறப்பித்து திரையுலகினரின் வாழ்வாதரத்தை மீட்டு தருமாறு தங்களை இருகரம் குவித்து பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறி உள்ளனர்.
கோரிக்கை மனுவை எஸ்.வி.சேகர், என்,ராமசாமி என்கிற முரளி இராம நாராயணன், ராதா கிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஜெயின், கேஜேஆர் (ராஜேஷ்) ஆகியோர் இணைந்து அனுப்பி உள்ளனர்.
#tamil producers seeks permission Tamilnadu chief minister to begin shooting work