விஜய் 65 படத்தை இயக்குகிறேனா?
பெண் இயக்குனர் விளக்கம்..
மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று, சூர்யா நடித்திருக்கும் சூரரைப்பொற்று படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவரது பெயரில் டிவிட்டர் பக்கத்தில், ’தளபதி 65 பட அறிவிப்பை அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி எதிர்பாருங்கள்’ என்று தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு பலர் வாழ்த்து கூறினர். ஆனால் இந்த தகவலை மறுத்திருக்கிறார் சுதா,
இதுகுறித்து சுதா கொங்கரா விடுத்துள்ள மறுப்பு செய்தியில் , “டிவிட்டரிலோ அல்லது வேறு எந்த சோஷியல் மீடியாவிலோ எனக்கு அக்கவுன்ட் கிடையாது. அதில் இணைந்தால் முறைப்படி தெரிவிப்பேன். என் பெயரில் வரும் போலி கணக்கை பின்தொடர்ந்து யாரும் நேரத்தை வீணடிக்காதீர்கள்” எனக் கூறி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் முடிவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது, அப்பட வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
‘Thalapathy 65’ announcement: Director sudha kongara clarifies
#sudhakongara #vijay #suriya #suraraipottru
#தளபதி65 #விஜய் #சுதாகொங்கரா #சூர்யா #சூரரைப்போற்று