மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம்.
தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
சென்னை மாவட்ட தலைமை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கம் 🙏