புல்லட்டில் பறக்கிறார் ஹுமா
சென்னை மார்ச் :
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தை இயக்குகிறார் எச்.வினோத். இதில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறார் அஜீத். ஐதராபாத், சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் கதாநாயகியாக காலா பட நடிகை ஹுமா குரோஷி நடித்து வருகிறார்.
oஹுமா குரோஷி புல்லட் மோட்டார் சைக்கிள் ஒட்டியபடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். சென்னையில் நெரிசலான பகுதிகளில் அவர் புல்லட் ஓட்டும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்காலிகமாக ஷுட்டிங் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததும் மீண்டும் படப் பிடிப்பு தொடங்கும்.
#Huma Qureshi to pair opposite Ajith in Valimai
#Huma Stunt Scene Shot for Valimai