வட கொரியா அதிபர் கவலைக்கிடம்?
அடுத்த ஆட்சிபற்றி விவாதம் நடக்கிறது..
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருக்கும் நாடு வட கொரியா. தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன். சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எப்போது பார்த்தாலும் ஏவுகணை சோதனைகள் நடத்தி அண்டைநாடுகளை பயமுறுத்துவதையே வேலையாக கொண்டிருந்தார். கடந்த சில தினங்க ளாகவே அவரைப்பற்றி வதந்தி பரவிவருகிறது
சமீபத்தில் கிம் ஜாங்கிற்கு
இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக அமெரிக்க உளவு நிறுவனம் தகவல் வெளியிட்டது. அதற்கு தென் கொரிய தரப்பிலிருந்து மறுப்பு எதுவும் வரவில்லை. இதையடுத்து உலக நாடுகளிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில் கிம் ஜாங் கிற்கு பிறகு ஆட்சி பொறுப்பு ஏற்கப்போவது அவரது தங்கை கிம் யோ ஜாங்கா அல்லது அவரது மனைவி பெயர் ரி சோல் ஜூவா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தென்கொரியா இந்த தகவல்களில் உண்மை இல்லை, வட கொரியாவில் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி உள்ளது.
#North Korean silence on Kim’s health bolsters speculation
#Kim Jong Un