20 லட்சம் கோடி திட்டங்கள்
நிதி அமைச்சர் அறிவிப்பு
பா. சிதம்பரம் கருத்து..
புதுடெல்லி மே :
பிரதமர் மோடி நேற்று மக்க ளுக்கு உரையாற்றும்போது கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்படும். அதுபற்றி நிதி அமைச்சர் விளக்கமாக் தெரிவிப்பார் என தெரிவித்திருந்தார்.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுமாலை கூறியாதாவது
இந்த ஆண்டின் அதாவது 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 தேதி ஆக இருந்தது. அந்த காலக்கெடு கூடுதலாக 4 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது
நலிந்த நிலையில் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியாக வழங்கவழி ஏற்படுத்தி தரப் படும். இனி சர்வதேச அளவில் 200 கோடிக்கு குறைவான டெண்டர்கள் வெளியிடப்படாது. அது போன்ற டெண்டர்கள் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்க ளுக்கே விடப்படும்
சிறு, தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 5 கோடியிலிருந்த ரூ. 10 கோடியாக அதிகரிக்கப்ப்டும்
குறுந்தொழில்களுக்கு இந்த முதலீட்டு வரம்பு 25 லட்ச த்திலிருந்து இருந்து ரூ. 1 கோடி ரூபாயாக உயர்த்தப் படும். கடன் திட்டங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. கடன்களை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். அதே சமயம் முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப் படாது. வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் கோரினால் அந்த புதிய கடன்கள் பெறுவதற்கு அரசே உத்தரவாதம் அளிக்கும்.
ஊழியர்களின் டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் 25 சதவிகிதம் குறைக்கப்ப டுகிறது. நாளை முதலே இந்த வரி விகிதம் குறைப்பு திட்டம் அமலுக்கு வரும்
இந்த நடைமுறை மூலம் மூலம் மக்களிடம் சுமார் 50 ஆயிரம் கோடி பணப்புழக்கம் இருக்கும்.
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், ‘நாடு முழுவதும் பசி மற்றும் ஏழ்மையில் இருக்கும் லட்சக்கணக்கா னவர்களுக்கு நிதி மந்திரி யின் பேச்சில் எதுவும் இல்லை பேரழி வுகளுக்கு உள்ளான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே செல்கின் றனர் அவர்களுக்கு நிதிமந்திரி பேச்சில் எதுவும் இல்லை. தினம் தினம் உழைப்பவர்களுக்கு இது ஒரு மரண அடி’ என தெரிவித்துள்ளார்.
#Nirmala Sitharaman on government’s Rs 20 lakh crore economic package