மேற்கு வங்காளம், ஒடிசாவை நடுக்கத்தில் ஆழ்த்திய அம்பன் புயல்
கொல்கத்தா. மே:
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு‘அம்பன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இது கடுமையான சூப்பர் புயலாக மாறி நாளை அல்லது நாளை மறுதினம் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் பலத்த புயல் காற்றுடன் கனமழை பெய்யும் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் 150 முதல் 160 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடக்க உள்ளதால் மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், கடலோர கிராமங்களில் பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
#Severe super cyclonic storm “Amphan” is moving towards the coast of West Bengal, Odisha and Bangladesh