Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி..

முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி..

போஸ்ட் புரொடக்ஷன் அனுமதி..

கொரோனா ஊரடங்கு பாதிப்பால் திரைப்பட படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தப்பட்டது. வரும் போஸ்ட் புரொடக்ஷன் 11ம் தேதிமுதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள் ளனர்.
இது பற்றி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  
கொரோனா பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலை களும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணி களுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவை களை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
எங்களின் கோரிக்கையை கனிவாக கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே, தமிழ் திரைப்பட துறை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11.5.2020 முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்ததற்காக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நேரத்தில் எங்களின் கோரிக்கை யை தங்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்து அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும்  நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு அறிகையில் தெரிவித்துள் ளனர்.
இந்த அறிக்கையில் இயக்குனர் பாரதி ராஜா, கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி.தியாகராஜன், கே.ஆர்.கே. முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பி.எல். தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், கே.ஈ. ஞானவேல்ராஜா, எச்.முரளி, கே.விஜயகுமார், சித்ராலக்ஷ்மணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஒநாட் எஸ்.சஷிகாந்த்,   ஜி. தனஞ் செயன், எஸ்.ஆர். பிரபு, ராஜசேகர் பாண்டியன், பி. மதன், ஜேஎஸ்கே. சதீஷ் குமார், சி.வி. குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா,  எம். திருமலை,  டில்லிபாபு, எஸ். நந்தகோபால், எம்.மகேஷ், ஆர்.கே. சுரேஷ், உதயா, வினோத் குமார், பி.எஸ். ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், கே.எஸ்.சிவ ராமன், நிதின் சத்யா, ராதாரவி, பஞ்சு சுப்பு, இயக்குனர் மnனோஜ் குமார், மதுரை செல்வம், பஞ்ச் பரத், ‘கின்னஸ் பாபுகணேஷ், எம்.கஸாலி, பி.ஜி.முத்தையா ஆகியோர் கையெழுத்திட்திருக்கிறார்கள்.
#Thank Note to Edapadi K.Palanisamy  and Kadambur Raju
#தயாரிப்பாளர்கள் முதல்வருக்கு நன்றி கடிதம்

Related posts

லாரன்சுக்கு ரஜினி அனுப்பிய100மூட்டை அரிசி

Jai Chandran

வெற்றி துரைசாமி வெற்றிமாறன் ஆய்வகம் அஞ்சலி

Jai Chandran

தாணு – கிச்சா சுதீப் இணைந்த மேக்ஸ் டிரெய்லர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend