பாரதிராஜாவுக்கு 3 முறை பரிசோதனை ஏன்?
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாரா?
திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று பரிசோதனை 3 முறை நடத்தப்பட்டது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையியில் அவர் தேனி வீட்டில் தனிமை படுத்தப்பட்டதாக டிவி, மீடியாக்களில் செய்தி வெளியானது. இதை யறிந்து பாரதிராஜா வீடியோவில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில்
பாரதிராஜா கூறி இருப்பதா வது:
டிவி, ஊடகங்களில் பரபரப் பாக செய்தி பரப்பப்படு கிறது. ஏதாவது பரபரப்பு தேவைப்படுவதால் அவர்கள் இப்படி செய்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன?
எனது சகோதரி உடல் நிலை சரியில்லாமல் தேனியில் இருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. அவரை பார்ப்ப தற்காக சென்னையிலிருந்து தேனி வந்தேன். சென்னை யிலிருந்து புறப்படும்போதே முறைப்படி எனக்கு சுகாதார துறையினர் பரிசோதனை செய்தார்கள். வழியில் ஆண்டிப்பட்டியில் பரிசோ தனை செய்தார்கள் தேனி வந்தவுடன் நானே நகராட்சி சுகாதார துறையினரை அழைத்து நான் பல மாவட் டங்களை கடந்து வந்ததால் தயவு செய்து எனக்கு பரிசோதனை செய்யுங்கள் என்றேன். எல்லா பரிசோதனையிலும் எனக்கு நெகட்டிவ் என்று வந்தது ‘என்றார்.
#three times corona test to bharathiraja
#பாரதிராஜா