Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் ரிஷி கபூர் காலமானார்

நடிகர் ரிஷி கபூர் காலமானார்..

கேன்சர் பாதிப்பில்
மூச்சு திணறி இறந்தார்..

மும்பை திரைஉலகை 60கள் தொடங்கி 80கள் வரை ஆண்டவர்கள் ராஜ்கபூர் குடும்பத்தினர். ராஜ்கபூர் படங்கள் என்றாலே பெரிய கவுரவமாக பார்க்கப்பட்டது. அவரது மகன்கள் சசிகபூர், ரிஷிகபூர் இருவருமே திரைப்படங்களில் ஹீரோக்களாக கொடி கட்டி பறந்தனர். குறிப்பாக ரிஷி கபூருக்கு பாபி படம் பெரும் புகழை ஈட்டித்தந்தது. அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சில்வர் ஹூப்ளி படங்களாக அமைத்தன. அவர் ஹீரோ அந்தஸ்த்திலிருந்து குணசித்ர வேடங்க ளுக்கு மாறிய பொழுது அவரது மகன் ரன்பீர் கபூர் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ரிஷிகபூர் கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அமெரிக்கா சென்று நியூயார்க் நகரில் தனியார் மருத்துவ மனையில் 11 மாதம் 11 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று மும்பை திரும்பினார். மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அடிக்கடி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இம்மாதம் ஆரம்பத்திலிருந்தே அடிக்கடி டாக்டரிடம் செல்வதும் வருவதுமாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடி யாக மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 67 வயது. ரிஷிகபூருக்கு நீட்டு கபூர் என்ற மனைவி, ரன்பீர் கபூர் என்ற மகன், ரித்திமா கபூர் என்ற மகள் உள்ளனர்.

54 வயதான இந்தி நடிகர் இர்பான்கான் நேற்று இறந்து மும்பை திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்று ரிஷி கபூர் இறந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ஏராளமான திரையுலகினர் ரிஷிகபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக் கின்றனர்.
#Veteran actor Rishi Kapoor dies at 67 in Mumbai hospital

#dimplekapadiya #rishikapoor #rajkapoor #bobby #deepika
#ரிஷிகபூர் #ரன்பீர்கபூர் #பாபி

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்

Jai Chandran

‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

CCCinema

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ பட இசை முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend