நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 20 ஆம் தேதி படம் திரைக்குவரவுள்ளது. இந்நிலையில் ஹீரோ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளது. இணையதள உரிமத்தை அமேசான் பெற்றுள்ளது. அதேபோல் தர்பார் படத்தின் சேட்டிலைட் உரிமையையும் சன்டிவியே கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற பெரிய படங்களை தொடர்ந்து சன்டிவி நிறுவனமே வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
CCCinema
I am a web developer who is working as a freelancer. I am living in Saigon, a crowded city of Vietnam. I am promoting for http://sneeit.com.