Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பாதுகாப்பு அணி போட்டி

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். அவர் மீது சங்க உறுப்பினர்கள் சிலர் புகார் அளித்தனர். இதையடுத்து விஷால் தலைமையிலான நிர்வாக குழு கலைக்கப்பட்டு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சங்கத்துக்கு விரைவில் புதிய நிர்வாகிகளை தேர்வு தேர்தல் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
சங்க தேர்தலில் போட்டியி டுவதற்காக தயாரிப் பாளர் டி.சிவா தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி உருவாக பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிட செயலாளர்களாக பி.எல்.தேனப்பன், ஜேஎஸ்கே. சதீஷ்குமார், துணை தலைவர் களாக தனஞ் செயன், ஆர்.கே.சுரேஷ், பொருளாராக கே.முரளிதரன். செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு நடிகர் ராதாரவி உள்ளிட்ட 21 பேர் இந்த அணி சார்பில் போட்டியிட உள்ளனர்.
சங்க உறுப்பினர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தற்போது முடிந்துவிட்ட நிலையில் அதை புதுப்பிக்கும் நிர்வாகிகள் குழு இல்லை எனவே யாரேனும் சங்க உறுப்பினர்கள் உடல்நிலை பாதித்து இன்சூரன்ஸ் உதவி தேவைப்பட்டால் எங்கள் அணியை சேர்ந்தவரிடம் தொடர்பு கொண்டால் 5 லட்சம் இன்சூரன்ஸ் ற்பாடு செய்து தரப்படும் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.சிவா என்று நிருபர்களிடம் தெரிவித் தார்.
பேட்டியின்போது பட அதிபர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப் பன், விஜயகுமார், எஸ்.எஸ். துரைராஜ், மனோஜ்குமார், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், சுப்புபஞ்சு, தனஞ்ஜெயன், நந்தகுமார், பாபுகணேஷ் என பலர் கலந்துகொண்டனர்.

#Producer Council Election plan to conduct soon
#Tamil film Producer’s Protection Team Formed
mmmm

Related posts

நாட் ரீச்சபிள் ( பட விமர்சனம்)

Jai Chandran

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ; கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

Jai Chandran

சன் டிவியில் வெற்றி உலா வரும் மல்லி மெகா தொடர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend