Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டி வி போல் சினிமா ஷுட்டிங்கிற்கும் அனுமதி வேண்டும்..

டி வி போல் சினிமா ஷுட்டிங்கிற்கும் அனுமதி வேண்டும்..

எடப்பாடிக்கு பாரதிராஜா கோரிக்கை..

திரைப்பட டைரக்டர் பாரதிராஜா தேனியில் தனது வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். டிவி ஷூட்டிங் அனுமதி போல் சினிமா ஷூட்டிங்கிற் கும் அனுமதி தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி முதல்வருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ள படியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.
அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோ கஸ் தர்கள், தொழிலாளர் கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக் கின்றனர். பணம் கொடுத் தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.
சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத் திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ள தைப் போன்ற ஒரு அனுமதி யை சினிமாவுக்கும் படப் பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரை யறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதிய ளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப் பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.
திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

#Bharathiraja seeks permission for Cinema shooting
#பாரதிராஜா #முதல்வருக்கு கடிதம்

Related posts

Studio9 Productions Next Production Announcement on Jan 14t

Jai Chandran

துபாயில்  கோடிகளில் முதலீடு ஈர்த்த முதல்வர் ஸ்டாலின்

Jai Chandran

கார்த்தியின் #உழவன்பவுண்டேசன்்சீரமைக்கும் வீசாடிக்குளம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend