Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜூன் மாதத்துக்கும் இலவச ரேஷன் அரிசி, பருப்பு, சர்க்கரை.

ஜூன் மாதத்துக்கும் இலவச ரேஷன் அரிசி, பருப்பு, சர்க்கரை..

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

சென்னை மே 6: மே மற்றும் ஜூன் மாதத் துக்கும் விலையில்லா ரேஷன் வழங்கப் படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்,
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி இன்று டிவியில் தோன்றி உரையாற்றினார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக் கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க 3 ஐஏஎஸ், அதிகாரிகள் மூலம் குழுக்கள் அமைக்கப் பட்டன. 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் உதவ 10 குழுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களுடன் நான்கு முறை ஆலோசனை நடத்தி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படு கிறது என்பதை அறிந்தேன்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதற்கு காரணம் அதிக ஜனத்தொகை, குறுகலான தெருக்கள். அதனால்தான் மண்டல வாரியாக சென்னையில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக்கி. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் மாநகராட்சியில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் தொடர்பு கொண்டு பிரச்னைகளை சொல்லி சிகிச்சை பெறலாம்.
தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் மூலம் தினமூம் 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப் படுகிறது. அது தவிர பொது உணவு கூடம் மூலம் அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர், கர்ப்பிணிகள் என 2 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது, இதனால் யாரும் பட்டினிஎன்ற நிலையில்லா மல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்படுள்ளன. பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டு நாள் தோறும் 12 ஆயிரம்பேருக்கு பரிசோதனை செய்யப்படு கிறது. அதனால்தான் தொற்று அதிகம் இருப்ப தாக தெரிகிறது, அதே சமயம் குணம் அடை வோர் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு நேரில் வந்து ஆய்வு செய்து பாராட்டியிருக் கிறது.
கொரோனா தொற்று பரவல் தடுக்க அரசு சொல்லும் விதிமுறைகளை மக்கள் கடை பிடிக்க வேண்டும் வெளியில் எப்போது சென்றாலும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும், எல்லா இடத்திலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்
ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளிமாநில தொழி லாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல ஆசைப்படுவர்களை அனுப்பிவைக்க அந்தந்த இடத்துக்கே அதிகாரிகள் சென்று அனுப்பி வைப்பார்கள். அதற்கான ரயில்வே அட்டவணைப்படி படிப்படியாக அவர்கள் அனுப்படுவார்கள். ஒரு வார காலத்துக்குள் இது நிறைவேற்றப்படும். மேலும் பொதுமக்களுக்கு மே மாதம் மற்றும் ஜூன் மாதம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
#TN CM Edaipaadi Pazhnichami announced free Ration to public

Related posts

THOR: LOVE AND THUNDER: ADVANCE BOOKING OPEN

Jai Chandran

Santhanam’s next film titled as “Kick”.

Jai Chandran

Chennai City Gangsters Teaser and Audio Launch!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend