சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் வழக்கு நாளை விசாரணை..
கடைகள் திறக்க அனுமதி குடிக்குமா?
புதுடெல்லி மே:
கொரோனா ஊரடங்கு முடிவடைவ தற்கு முன்பு டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த 7 ம் தேதி திறக்கப்பட்டது. நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க ஐகோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் நிபந்தனைகளை. மீறியதால் கடைகளை மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. மனுவில் பிழை இருப்பதால் அதை திருத்தி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி செய்யப் பட்டது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.முன்னதாக பலர் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். வழக்கில் உத்தரவிடுவதற்கு முன் தங்கள் தரப்பு வாதத்தை கேட்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
#Tamil Nadu challenges HC order on closure of Tasmac liquor shops
#TASMAC
#டாஸ்மாக்