Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் புதிய படம் தொடக்கம்

தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது.

ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.

கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது.

இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

Tamil Nadu State Amateur Kickboxing championship

Jai Chandran

“குப்பன்” படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்

Jai Chandran

சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend