Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றிமாறன் – சிலம்பராசன் இணையும் “அரசன்” ஷூட்டிங் தொடங்கியது..

வடசென்னை உலகம் பெரிதாகிறது: வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது

வடசென்னை என்னும் வெற்றி படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அனைவராலும் பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் டிஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார். விரைவில் அரசன் படப்பிடிப்பில் இணைவார் .

ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘அரசன்’ படம் ராக்ஸ்டார் அனிருத், சிலம்பரசன் டிஆர் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது . அக்டோபர் மாதம் அனிருத் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட அரசன் ப்ரோமோ, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மற்றும் மகத்தான வரவேற்பை பெற்றது.

வடசென்னை உலகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கூடுதலாக ‘அரசன்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க ஒரு சிறப்பான குழுவை ஒன்றிணைக்கிறது. படத்தின் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்
தயாரிப்பு நிறுவனம்: கலைப்புலி S தாணுவின் V கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: கலைப்புலி S தாணு
ஒளிப்பதிவாளர்: R வேல்ராஜ்
படத்தொகுப்பாளர்: R ராமர்
கலை இயக்குனர்: ஜாக்கி
சண்டை பயிற்சி: பீட்டர் ஹெய்ன்
ஒலி & அட்மாஸ் மிக்ஸ்: T உதயகுமார்
ஒலி வடிவமைப்பு: பிரதாப் கே
VFX: R ஹரிஹரசுதன்
கலரிஸ்ட்: க்ளென் காஸ்டின்ஹோ
DI: இன்ஃபினிட்டி மீடியா
ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி
உடை வடிவமைப்பாளர்கள்: பூர்த்தி & விபின்
உடைகள்: ஆர். முருகானந்தம்
ஸ்டில்ஸ்: மு. பாஸ்கர் பிரசாந்த்
விளம்பர வடிவமைப்பு: சசி & ஷாஷி
தயாரிப்பு மேற்பார்வை AP பால் பாண்டி
PRO: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Related posts

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம்: நடிகை பிந்து மாதவி !

Jai Chandran

Trailer of ArunVijay’s Borrder

Jai Chandran

பிஆர்ஓ யூனியன் தேர்தல்: டைமண்ட் பாபு தலைவர், யுவராஜ் செயலாளராக தேர்வு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend