படம்: ஷூ
நடிப்பு: யோகிபாபு, திலீபன், ரெட்டின் கிங்ஸ்லி, கே.பி. ஒய் .பாலா, ஆண்டனி தாஸ், டோனி, ஜார்ஜ் விஜய், செம்மலர்
தயாரிப்பு: ஆர்.கார்த்திக், எம்.நியாஷ்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : ஜேக்கப் ரத்தினராஜ், ஜெமின் ஜோம் அய்யனேத்
இயக்கம்: கல்யாண்
பி ஆர் ஒ: நிகில் முருகன்
சின்னப் பெண்களை கடத்தி செல்லும் ஒரு கூட்டம் அவர்களை காட்டு பங்களாவில் அடைத்து வைத்து பெருசுகளுக்கு விருந்தாக் குகிறது. இதுவொருபுறம் நடக்க திலீபன்(திலீபன்) தனது ஆய்வு கூடத்தில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் கூட்டிச் செல்லும் ஒரு கருவியை கண்டு பிடித்து அதை ஷூ ஒன்றில் ஃபிக்ஸ் செய்கிறார். எப்படியாவது ரவுடியாக வேண்டும் என்று எண்ணும் மாரி (யோகி பாபு) மர்டர் செய்யும் பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். திலீபன், தான் கண்டுபிடித்த ஷூ போலீஸாரிடம் கிடைக் காமலிருக்க சாலை யோரத்தில் ஒளித்துவைக்கிறார். அந்த ஷூ சிறுமி ஒருவரிடம் கிடைக்க அதை அவர் மாரியிடம் தருகிறார். இந்நிலையில் சிறுமியை கடத்தல் கூட்டம் கடத்தி சென்று காட்டுபங்களாவில் அடைக்கிறது. மாரியிடம் கிடைத்த ஷூவைக் கொண்டு அவர் செய்யும் காரியம் என்ன, ஷூவை தவறவிட்ட திலீபன் மீண்டும் அதை கண்டு பிடித்தாரா, கடத்தல் கூட்டத்திடம் சிக்கிய சிறுமியின் கதி என்ன என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.
ஷூ என்ற டைட்டிலும், யோகிபாபு என்ற பெயரும் படத்தைபற்றி அறிந்துகொள்ள ஆவலை தூண்டு கிறது. தொடக்க காட்சியே குழந்தைகளை கண்டெயினரில் கடத்தி வரும் அடியாட்களின் அராஜகத்தை காட்டி கிரைம் திரில்லர் கதைக்கான அச்சரத்கை போடுகிறார் இயக்குனர்.
திடீரென்று ஷூ வை வைத்து திலீபன் சோதனை செய்யும் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத் துகிறது பின்னர் அந்த ஷூ ஒரு டைம் மிஷின் என்று சொல்லும் போதுதான் முதலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கிறது.
மாரியாக வரும் யோகி பாபு கையில் கத்தியை வைத்துக் கொண்டு பாவ்லா காட்டும்போது சிரிப்பு ரவுடியாக தெரிகிறார்.
தனது ஷூவை தொலைத்த சிறுமியை யோகிபாபு மிரட்டும் போதுகூட சிரிப்புதான் வருகிறது.
கிளைமாக்ஸில் வரும் திலீபன் தனது டைம் மிஷின் ஷூவை அணிந்து துப்பாக்கி குண்டில் பலியான சிறுமியை உயிரோடு மீட்பது போன்ற காட்சிகளில் லாஜிக் இல்லாவிட்டாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அப்பாடா என்ற மன திருப்தியை தருகிறது.
செருப்பு தைக்கும் தொழிலாளி யாக வரும் ஆண்டணிதாஸ் குடிகாரனாக, பொறுப்பற்ற தந்தையாக எதார்த்தமான நடிப்வை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆண்டனி தாஸ் மகளாக வரும் சிறுமி அப்பார நடிப்பை வெளியிட் டுள்ளார்.
ஜேக்கப் ரத்தினராஜ், ஜெமின் ஜோம் அய்யனேத் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சாம் சி.எஸ். அதிரடி இசை காட்சிகளை தூக்கிபிடிக்கிறது.
திரைக்கதையில் இயக்குனர் கல்யாண் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் வேகம் கூடியிருக்கும் . ஹீரோ வந்து காப்பாற்றும் வழக்கமான கிளைமாக்ஸாக இல்லாமல் குழந்தைகளே வெகுண்டெழுந்து கடத்தல் கூட்டத்தை துவசம் செய்வது இளம்பெண்களுக்கு துணிச்சலையும் நம்பிக்கையும் ஊட்டும்.
ஷூ- பிஞ்சு குழந்தைகளுக்கு விழிப்புணர்வும் துணிச்சலும் தரும்.

