Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரெட் லேபில் (பட விமர்சனம்)

படம்: ரெட் லேபில்

நடிப்பு: லெனின், ஆர்வி உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன், அஸ்மின்

தயாரிப்பு: லெனின்

இசை: கைலாஷ் மேனன்

ஒளிப்பதிவு: சதீஷ் மெய்யப்பன்

இயக்கம்: ஏ ஆர் வினோத்

பிஆர்ஓ: ஸ்ரீதர் ராஜு, ஹரிபாபு, உதயகுமார்

கல்லூரியில் நடக்கும் மாணவ தலைவர் தேர்தலில் போட்டியிட எம் எல் ஏ மகன் அடாவடி காட்டுகிறார். அவருக்கு எதிராக மற்றொரு மாணவர் போட்டியிட எண்ணுகிறார். ஆனால் எம்எல்ஏ மகனால் தனக்கு பாதிப்பு வரும் என்று எண்ணுவதால் முன்னாள் மாணவர் தலைவர் கதிரிடம் (லெனின்) சென்று ஆதரவு கேட்கிறார். அவரும் அதற்கு ஆதரவு தர சம்மதிக்கிறார். இதற்கிடையில் எம்எல்ஏ மகளுக்கும், கதிருக்கும் காதல் மலர்கிறது . ஆனால் தன் மகளை முறை மாமனுக்கு கட்டித் தர எம்எல்ஏ திட்டமிடுகிறார். இந்த இடியாப்ப சிக்கலுக்கிடையே ஒரு கொலை நிகழ்கிறது. இதற்கு ரெட் லேபில் கிளைமாக்ஸ் எதிர்பாராத பதில் அளிக்கிறது

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சில படங்கள் திரைக்கு வந்து ஆச்சரியப்படுத்துவதுண்டு அந்த வகையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரைக்கு வந்திருக்கும் ரெட் லேபில் படம்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

கல்லூரி  மாணவர் தேர்தல் கதையாக தொடங்கி ஒரு கிரைம் திரில்லராக படம் திசை மாறி பயணிப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லெனின் ஹீரோவாக மட்டுமல்லாமல் படத்தையும் தயாரித்திருக்கிறார். நடிப்பை பொறுத்தவரை ஹீரோ என்று வெத்து பந்தா காட்டி அலட்டாமல் நிதானமாக காட்சிகளை கையாண்டு கெத்து காட்டுகிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடியும் காட்டியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி கல்லூரி தேர்தல், எம்எல்ஏ மகனின் அலட்டல் என்று கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சீரியஸ் ஆகி க்ரைம் திரில்லர் கதையாக மாறும்போது எதிர்பாராத திருப்பங்கள் ஷாக் தருகிறது.

கல்லூரி வளகத்துக்குள்ளேயே நடக்கும் கொலையை மறைப்பதற்காக லெனின் மற்றும் அவரது தோழர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் ரசிக்க வைக்கிறது.

பிணத்திற்கு நடக்கும் ரோபோ கால்கள் மாட்டி தற்கொலைபோல் ஏற்பாடு செய்ய பிளான் செய்வது ட்விஸ்ட். ஆனால் அதிலும் இன்னொரு ட்விஸ்ட் கொடுத்து இயக்குனர் ஏ ஆர் வினோத் தனது இருப்பை நிலைநாட்டியிருப்பது அப்ளாஸ் பெறுகிறது.

எம்எல்ஏவாக நடித்திருக்கும் ஆர்வி உதயகுமார் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தலான வேகமும், நக்கலான பேச்சும் காட்டி அசத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு ஆர்வி. உதயகுமாருக்கு நிறைய படங்கள் தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
எத்தனை நாள் தான் நானும் நல்லவனாக நடிப்பது என்று அஜித் கூறிய வசனம் இவருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து இவர் இல்லங்கள் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

ஹீரோயினாக நடித்திருக்கும் அஸ்மின் கிளைமாக்சில் திடீர் சர்ப்ரைஸ் தருகிறார். அது என்ன என்பதை படத்தில் பாருங்கள்.
மேலும் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

லெனின் படத்தை தயாரித்திருக்கிறார்

கைலாஷ் மேனன் இசை வெரைட்டி காட்டி இருக்கிறது.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது.

இயக்குனர் ஏ ஆர் வினோத் ஏதோ ஒரு கிரைம் திரில்லர் எடுத்தோம் என்றில்லாமல் திரைக்கதையில் கவனம் செலுத்தி ரசிக்கும்படியான திரில்லரை தந்ததற்காக கைகுலுக்கலாம்.

ரெட் லேபில் – ஏமாற்றாது.

 

Related posts

KodiyilOruvan – Coming soon in AmazonPrime

Jai Chandran

அதர்வா புரட்சி இளைஞனாக நடிக்கும் அட்ரஸ்

Jai Chandran

ஹரி இயக்கத்தில் நடித்த அனுபவம் பற்றி அருண் விஜய் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend