படம்: லாக் டவுன்
நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், ராம்ஜி, விநாயக ராஜ், விது, சஞ்சீவ், பிரியா கணேஷ், ஆஷா
தயாரிப்பு: லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஷ்கரன்
தயாரிப்பு தலைமை நிர்வாகி: ஜி கே எம் தமிழ் குமரன்
இசை: என் ஆர் ரகுநாதன், சித்தார்த்தன் விபின்
ஒளிப்பதிவு: கே ஏ சக்திவேல்
இயக்கம்: ஏ ஆர் ஜீவா
பி ஆர் ஓ: சதீஷ்குமார் (S2)
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அனுபமா. இவர் ஐடி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்க திடீரென்று தோழி ஒருவர் அழைத்ததின் பேரில் பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு மது குடித்துவிட்டு மயங்கி விழுகிறார். போதை தெளிந்து மறுநாள் வீடு வந்து சேர்கிறார். சில நாட்களுக்கு பிறகு அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. தன்னை யார் பலாத்காரம் செய்தார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். தன் வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க எண்ணுகிறார். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் வந்து விட அவரால் எந்த செயலும் செய்ய முடியாத நிலையில் இறுதியில் அவர் எடுத்த முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
அனுபமா பரமேஸ்வரன் இதுவரை ஹீரோவுக்கு ஜோடி போட்டு டூயட் பாடி நடித்துக் கொண்டிருந்த நிலையில் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிப்பை பெரு வெள்ளமாக வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாக லாக் டவுன் படத்தின் கதாபாத்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
வித்யா பாலன் நடிப்பில் கஹானி என்ற படம் சில வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியானது. கர்ப்பமான அவர் கணவனை தேடி அலைவார். அது போன்ற ஒரு கடினமான கதாபாத்திரம்தான் இந்த படத்தில் அனுபமா ஏற்றிருக்கிறார்.
வளர்ந்து வரும் ஹீரோயின்கள் யாரும் இது போன்ற பாத்திரத்தை ஏற்க தயங்குவார்கள்.. மனரீதியாகவும, உடல் ரீதியாகவும் ஒரு வலிமை இருந்தால் தான் இது போன்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும்.
தோழியின் அழைப்பை ஏற்று பார்ட்டிக்கு செல்லும் அனுபமா அங்கு மது அருந்திவிட்டு ஆட்டம் போடுவதும் எதிர்பார்க்காத ஷாக்.
தான் கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை குடும்பத்தினருக்கு தெரியாமல் கலைப்பதற்காக அனுபமா டாக்டர்களின் கால்களில். விழுந்து கெஞ்சுவது உருக்கம். எந்த சிகிச்சைக்கும் தான் தயார் என்பது போல் துணிவது, தவறான வழியில் கர்ப்பம் அடையும்.இளம் பெண்ணின் மன நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
சார்லி, நிரோஷா நடுத்தர குடும்ப தம்பதிகளாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், ராம்ஜி, விநாயக ராஜ், விது, சஞ்சீவ், பிரியா கணேஷ், ஆஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
என் ஆர் ரகுநாதன், சித்தார்த் விபின் என இரு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். பாடலில் சோகத்தை பிழிந்திருக்கின்றனர்
கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு வெறுமையான கலர் டோனில் காட்சிகளை பதிவு செய்திருக்கிறது.
இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை தரும் படமாக இயக்கியிருக்கிறார் ஆர் ஜீவா.
லாக்டவுன் – வெளிநாட்டு விருதுகளை வெல்லும்.

Review By
K Jayachandhiran
Trending Cinemas now.com
