தேர்ட் ஐ (Third eye) என்டர்டைன்மென், எஸ் பி சினிமாஸ் சார்பில் தேவராஜ் மார்க்கண்டேயன், கிஷோர் எஸ் இணைந்து அதிக பொருட் அளவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் டீசல்.
இதில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஜோடியாக நடிகின்றனர். இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். எம் எஸ் பிரபு , ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். பிஆர்ஓ சுரேஷ் சந்திரா (D one), அப்துல் ஏ நாசர்.
இப்படம் உருவான விதம் பற்றி இயக்குனர் சண்முகம் கூறியதாவது:
டீசல் பெட்ரோல் தயாரிக்க பயன்படும்
க்ருடு ஆயில் பைப் லைன் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அது போகும் வழியிலேயே திருட்டு நடக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பல கோடி மதிப்புள்ள க்ருடு ஆயில் கொள்ளை போகிறது. அதற்குப் பின்னால் ஒரு சர்வதேச
கூட்டமே இருக்கிறது. ஆனால் இதை சர்வதேச பிரச்னையாக பேசாமல் உள்ளூர் நிலைமைகளை வைத்து கதையாக பின்னப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
இதில் நடிப்பதற்காக ஆக்ஷன் ஹீரோவாக, 6 அடி உயரமான நடிகர் தேவைப்பட்டார் அத்துடன் கதாபாத்திரத்துக்கு புதியவராக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு பொருத்தமாக ஹரிஷ் கல்யாண் இருந்தார். அவரை அணுகி இந்த கதையை கூறிய போது அவருக்கு கதை பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டார். இதுவரை ஹரிஷ் கல்யாண் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுமார் மூன்று மாத காலம் அவர் எந்திர படகு ஓட்டும் பயிற்சி பெற்றார். இந்தப் படகை கடலில் ஓட்டும் போது பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் ஆனால் அதை ஒரு பக்கம் திருப்புவதென்றால் அதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு கடினமான பணி. அதை கஷ்டம் பார்க்காமல் கற்றுக்கொண்டு ஹரிஷ் கல்யாண் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நடிகை அதுல்யா ரவி வக்கீல் வேடத்தில் நடித்திருக்கிறார். பிரதான வில்லன் வேடத்தில் வினய் ராய் நடித்துள்ளார். ஜாகிர் உசேன், சச்சின் கதேகர் ஆகியோரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்போது க்ருடு ஆயில் திருட்டு நடக்கிறதா என்றால் 2014 வரை இந்த திருட்டு நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து பைப் லைன்களை அதி உயரத்தில் மாற்றி விட்டதுடன் கடற்படை பாதுகாப்பு வீரர்களும் எந்நேரமும் எந்திர துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். அதனால் இந்த திருட்டு குறைந்திருக்கிறது.
டீசல் பட கதையைப் பொறுத்தவரை 2014 உடன் சம்பவங்கள் முடிவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு நடந்த கிரைம்களை வைத்துத் தான் இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
பழவேற்காடு, காசிமேடு, பாண்டிச்சேரி, நாகர்கோயில் என பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அமைக்கப்பட்டது.
நாங்கள் படப்பிடிப்பு மேற்கொண்ட பகுதியில் வாழும் மீனவர்கள் படப்பிடிப்பு நடத்த மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். கடல் பகுதியில் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்துவத திட்டமிடப்பட்டது ஆனால் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்தது. அதற்கு காரணம் கடலின் நிலையில்லா தன்மை தான்.
கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகளில் இந்த படப்பிடிப்பை நடத்துவதை விட நேரடியாகவே கடலில் இதனை லைவ்வாக படமாக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.
டீசல் படத்திற்கு எம் எஸ் பிரபு, ரிச்சர்ட் நாதன் என இரண்டு ஒளிபதிவார்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அதற்கு காரணம் காதல் காட்சிகளை கவிதை போல் படமாக்க எம் எஸ் பிரபு தேவைப்பட்டார். ஆக்சன் காட்சிகளை விறுவிறுப்போடு படமாக்குவதில் ரிச்சர்ட் எம் நாதனின் பணி எனக்கு பிடிக்கும் என்பதால் அவரை ஆக்சன் காட்சிகளை படமாக்க கேட்டுக் கொண்டேன் . ஸ்டண்ட் காட்சிகளை சில்வா மாஸ்டர் அமைத்திருக்கிறார். திபு நினன் தாமஸ் ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகியிருக்கிறது.
இவ்வாறு இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறினார்
நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
டீசல் கதை எனக்கு பிடித்திருந்தது நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுவரை முழுக்க ஒரு ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. இதில் தான் முதல் முறையாக ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். இது என்னுடைய சினிமா பயணத்தில் திருப்புமுனை கதாபாத்திரமாக இருக்கும்.
இதில் மீனவனாக நடித்திருக்கிறேன். அதே சமயம் இது க்ருட் ஆயில் திருட்டு பற்றிய அண்டர் வேர்ல்ட் கதை. ஒரு மீனவனுக்கும் அண்டர்வேர்ல்ட் கதைக்கும் என்ன சம்மந்தம் என்பதை நீங்கள் படத்தில் பாருங்கள்.
இதுவரை நான் நடித்த படம் எதுவும் தீபாவளி தினத்தில் திரைக்கு வந்ததில்லை. தலைவர் படத்தைத்தான் முதல் நாள் முதல் காட்சி பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த தீபாவளிக்கு என்னுடைய படமே திரையில் வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு ஹரிஷ் கல்யாண் கூறினார்.