Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காந்தி டாக்ஸ் (பட விமர்சனம்)

படம்: காந்தி டாக்ஸ்

நடிப்பு: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைத்ரி, சித்தார்த் ஜாதவ்

தயாரிப்பு: Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment

இசை: ஏ ஆர் ரகுமான்

ஒளிப்பதிவு: கரண் பி ராவத்

இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலிகர்

பிஆர்ஓ: சதீஷ் (AIM),

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கும் தொழிலதிபர் அரவிந்த்சாமி சிலரின் சதியால் நஷ்டத்துக்கு ஆளாகிறார். அவரது சொத்துக்கள் ஒவ்வொன்றாக பறிபோகிறது. இதற்கிடையில் வருமானம் இன்றி தவிக்கும் விஜய் சேதுபதி ஒரு சம்பவத்தால் அரவிந்த்சாமி மீது கோபம் அடைந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். இதற்கிடையில்
தனது பங்களாவை கொளுத்தி விட்டு வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிடுகிறார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.

பிரபல ஹீரோக்கள் விஜய் சேதுபதி அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது. படத்தில்
வசனமே இல்லாமல் அத்தனை பேரும்  எப்படி நடித்தார்கள் என்று கேட்டால், எல்லாமே முகபாவனை, உடல் மொழிகள் பரிமாறி நடித்திருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இயக்குனர் அமைத்திருக்கிறார்.

மும்பையில் ஏழைகள் வாழும் குடியிருப்பு பகுதியில் உடல் நலம் இல்லாத தாயை பராமரித்து தனி ஆளாக வசிக்கும் விஜய் சேதுபதி அன்றாடம் காய்ச்சியாக சுற்றுவதும் கையில் கிடைக்கும் குறைவான பணத்தை வைத்து தினம் தினம் பிழைப்பு நடத்துவது எதார்த்தமான நடிப்பு அந்த கஷ்டத்திலும் எதிர் வீட்டுப் பெண் அதிதி ராவுடன் விஜய் சேதுபதி காதல் நூல் விடுவது இளவட்ட குறும்பு.

கோடீஸ்வரர் அரவிந்தசாமி தொழிலில் நஷ்டம் அடைந்து அதிர்ச்சியாவதும் பின்னர் இருக்கும் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிக்க திட்டம் போட்டு அழகான பங்களாவை எரிக்க செய்யும் அந்த சதி வேலை,  இப்படி கூட ஒரு பங்களாவை எரிக்க முடியுமா என்று அதிர வைக்கிறது.

கவர்ச்சி ஹீரோயினாக பல படங்களில் நடித்த அதிதி ராவ் இந்த படத்தில் சேலை கட்டிக்கொண்டு விஜய் சேதுபதியின் காதலியாக அளந்து அளந்து நடித்திருக்கிறார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், பின்னணி இசையில் எம்ஜிஆர் சிவாஜி அரச கதைகளில் நடித்த போது ஒலிக்கும் அந்தக் கால இசையை படம் முழுவதும் இழையோடச் செய்து வித்தியாசமான அனுபவம் தருகிறார்.

கரண் பி ராவத் ஒளிப்பதிவு தெளிவு.

இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலிகர் படத்தில் வித்தியாசத்தை காட்டி அசர வைக்கிறார்.

காந்தி டாக்ஸ்- வசனம் இல்லாவிட்டாலும் படம் ரசிக்கலாம்.

Review By

K Jatachandhiran

Trending cinemas now com

Related posts

நடிகர் உதயா 40 சதம் சம்பளம் குறைப்பு…

Jai Chandran

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” வெளியிட்ட பாரதிராஜா

Jai Chandran

குஷி தமிழ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்: விஜய் தேவரகொண்டா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend