Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ பட கிளிம்ப்ஸ்

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – வசிஷ்டா (Vassishta) – எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) – கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.

விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக- மிக சக்தி வாய்ந்த – வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார்.

இந்த காட்சி தொகுப்பு நன்கு வடிவமைக்கப்பட்ட டீசராகும். இது சிரஞ்சீவியை ஒரு முக்கியமான வேடத்தில் பார்க்க ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆரம்பக் கட்ட பரபரப்பு இப்போது அதிகரித்து வரும் நிலையில்.. கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.

இயக்குநர் வசிஷ்டா பிரம்மாண்டமும், வெகுஜன ஈர்ப்பும் நிறைந்த ஒரு விகிதாச்சார காவியத்தை… பிரபஞ்சத்தை … கற்பனை செய்து படைத்திருப்பதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் காந்தம் போன்ற திரை ஆளுமை ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் அவரது தீவிர நடிப்பு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஸ்வம்பராவின் பிரபஞ்சத்தை கனவு போன்ற தொடுதலுடன் வடிவமைத்ததற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ. எஸ். பிரகாசின் கடும் உழைப்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)- விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான …கம்பீரமான… காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) கிளர்ச்சியூட்டும் வகையில் பின்னணி இசையை அமைத்து காணொளியை சக்தி வாய்ந்த உணர்ச்சி எழுச்சியை சேர்க்கிறது. VFX – ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது. மேலும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பீடுகள் கிளிம்ப்ஸ் முழுவதும் தெளிவாகத் தெரிகின்றன.

சிரஞ்சீவியின் புகழ்பெற்ற வாழ்க்கையில் விஸ்வம்பரா திரைப்படம்- ஒரு மைல்கல் படமாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இதனை திரை ரசிகர்கள் தவற விட விரும்பமாட்டார்கள். இந்தக் காட்சி உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரை போற்றும் ரசிகர்களுக்கும் மிகச் சரியான பிறந்தநாள் பரிசாகும்.

இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்.‌ இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.

*நடிகர்கள் :*

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , திரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத் , குணால் கபூர் மற்றும் மௌனி ராய் ( ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் )

*தொழில்நுட்ப குழு :*

எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி – பிரமோத்
தயாரிப்பு நிறுவனம்: யு வி கிரியேசன்ஸ்
இசை : எம். எம். கீரவாணி , பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு : சோட்டா கே. நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ. எஸ். பிரகாஷ்

 

Related posts

Karunakaran a pivotal role in “Malaysia to Amnesia”.

Jai Chandran

குழந்தை வேலப்பன், நர்மதா நடிப்பில் செல்போன் படம் யுகம்

Jai Chandran

Team Pushpa Wishes Producer Ravi garu

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend