Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் திடீர் தள்ளிவைப்பு.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் திடீர் தள்ளிவைப்பு.

தேர்தல் அதிகாரி அறிவிப்பு..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி கே.கே.மஞ்சுளா மற்றும் தேர்தல் அதிகாரி, நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் வெளியிடடுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 -2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்த லுக்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும் மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் மேற்படி சங்கத்தின் தேர்தலை ஏற்கனவே அறிவித்த தேதியில் நடத்த இயலாத சூழ்நிலை இருக் கின்ற காரணத்தால் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை வரவிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக் கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#tamil Producer council election postpond

#தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தேர்தல்

Related posts

தமிழகத்தில் ஒன் ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி: கமல்ஹாசன் மெசேஜ்

Jai Chandran

An honor that crossed the seas for Sanitation Worker..

Jai Chandran

Trisha’s Rangi usbekisthan shooting experience

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend