Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

மாஸ்டர் பட விழாவில் விஜய் ருசிகர பேச்சு.

.

அஜீத்போல் காஸ்ட்யூம் அணிந்தேன்..

சென்னை, மார்ச்
பிகில் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிரூத் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடன கலைஞர்கள் நடனம் ஆடினார் கள். நடிகை சிம்ரன் மேடையில் தோன்றி விஜயுடன் ஜோடி போட்டு ஆடிய ஆல்தோட்ட பூபதி நானடா பாடல் உள்ளிட்ட சில பாடல்களுக்கு இடுப்பை வளைத்து நெளித்து ஆடி கவர்ந்தார்.
பின்னர் நடிகர் விஜய் பேசினார். அப்போது சிம்ரன் ஆட்டத்தை பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :

ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் மாஸ்டர் விழா என்றதால் அரை மனதோடு ஒப்புக்கொண்டேன். கடந்து முறை நடந்த பிகில் பட விழாவில் ரசிகர்களுக்கு நடந்த அசவுகரியம் தான் இதற்கு காரணம் அத்துடன் கொரோனா பாதிப்பு பற்றிய சுகாதார எச்சரிக்கையும் காரணம்.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்று என்பதை அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் ‘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்’ என நான்கு வரியில் பதில் சொல்லிவிட்டு சிரித்தார். தமிழ் சினிமாவில் விஜயசேதுபதி தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டையுமே நன்றாக எடுத்திருந்தார். மாஸ்டர் படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து சொல்லுங்கள். கத்தி படத்துக்கு பிறகு மாஸ்டர் படத்துக்கு இசை அமைத்திருக் கிறார் அனிருத்.
இந்த இந்தநேரத்தில் ஒரு குட்டி கதை சொல்ல தோன்றுகிறது. நம் வாழ்க்கை நதி போன்றது சிலர் விளக்கு போடுவார்கள், சிலர் பூ போடுவார்கள். சிலர், நம்மை பிடிக்காதவர்கள் கல் எறிவார்கள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் நாம் கடந்து செல்லவேண்டும்.
வருமான வரி நெய்வேலியில் மக்கள் எனக்காக திரண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றி. அது வேற லெவலில் இருந்தது. நான் இந்த விழாவுக்கு கோட் சூட் அணிந்து வந்திருப்பதை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார்கள். என் நபர்அஜீத் போல் வந்தேன்

இவ்வாறு விஜய் பேசினார்.

பின்னர் விஜய்சேதுபதிக்கு, விஜய் முத்தம் தந்தார்.
விழாவில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, எஸ். ஏ. சந்திரசேகர், ஷோபா, மாளவிகா மோகனன், அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

#Master Audio Launch: Vijay addresses Coronavirus, raid and Ajith in moving speech

Related posts

Ajay Devgn and Dil Raju all set to collaborate

Jai Chandran

புத்தக கண்காட்சிக்கு நாளை வரும் வைரமுத்து

Jai Chandran

மாடியிலிருந்து டூப் போடாமல் குதித்த அருண் விஜய்: இயக்குனர் வியப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend