Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அனிருத்- காவ்யா திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

பிரபல இளம் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் மகள் காவியா திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது  திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  போன்றவர்கள் திருமண விழாவில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 பின்னர்  சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அனிருத் ரவிச்சந்தர் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீஷன்  கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நடிகர்கள் அஜித், சிம்பு இயக்குனர்கள்  நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஏராளமான அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Related posts

Here is FriendshipTrailer

Jai Chandran

Ram-Kriti starrer “The Warriorr” “Bullet Song” Launch

Jai Chandran

“கங்கணம்” பட பர்ஸ்ட் லுக் கலைப்புலி எஸ் தாணு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend