Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை ப்ரியா பவானி சங்கர் திடீர் திருமணம்..

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரும் இவரது நண்பருமான ராஜ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு குடும்பத்தாரும் நேரில் சந்தித்து பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதை எடுத்து
பிரியா பவானி சங்கர், ராஜ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற்று முடிந்தது.
பிரியா பவானி சங்கர் தனது திடீர் திருமணம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது:
அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.

இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம்.

உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்.

இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

Related posts

Bindhumadhavi plays as a devotee of naga amman.

Jai Chandran

Completed first schedule of RC15

Jai Chandran

டப்பிங் யூனியன் இறகு பந்து போட்டி: ஆர்.கே.செல்வமணி பரபரப்பு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend