Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜான் டோ (பட விமர்சனம்)

படம்: ஜான் டோ

நடிப்பு: அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினித் சந்தோக், நீரவ்

தயாரிப்பு: அர்கா மீடியா ஒர்க்ஸ் ஷோபு யர்லகட்ட, பிரசாத் தேவினேனி

இசை: முஜீப் மஜீத்,
கூடுதல் இசை: ஆர்டிஸ்ட் 404

ஒளிப்பதிவு: பிரீத்தா ஜெயராமன்

இயக்கம்: மதுமிதா

பிஆர்ஓ :: யுவராஜ்

கதை: கணவனை விபத்தில் பறிகொடுத்த பெண் துபாயிலிருந்து தனது மகள் லக்கி (சிருஷ்டி ) மற்றும் மகன் ஹிருதய்யுடன்  (நீரவ்) ) வந்து தங்குகிறார். அம்மாவுடன் மகளுக்கு எப்போதும் சண்டை. இந்த நிலையில் தம்பியை அழைத்துக் கொண்டு லக்கி ஐஸ்கிரீம் கடைக்கு செல்கிறார். அந்த இடத்தில் அவரது தம்பி காணாமல் போகிறான். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் தாயும் மகளும் புகார் செய்கின்றனர். போலீஸ் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேட ஆரம்பிக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஏரியில் மூழ்கும் காரில் சிறுவன் உடல் ஒன்று கிடைக்கிறது. அதை அங்குள்ள இன்ஸ்பெக்டர் சந்துரு (அர்ஜுன் தாஸ்) கைப்பற்றுகிறார். இந்த சிறுவனுக்கும் காணாமல் போன சிறுவனுக்கும் என்ன சம்மந்தம் என்பதை அதிர்ச்சி தரும் கிளைமாக்ஸுடன் விளக்குகிறது ஜான் டோ.

அர்ஜுன் தாஸ் மெல்ல மெல்ல ஹீரோவாக தன்னை நிலை நிறுத்தி வரும் நிலையில் சினிமாவுக்கு வரும் அனைத்து ஹீரோக்களும் எதிர்பார்க்கும் போலீஸ் யூனிபார்ம் போடும் கதாபாத்திரம் என்ற கனவு இந்த படத்தின் மூலம் அர்ஜுன் தாஸுக்கு முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது. போலீஸ் வேடம் கிடைத்தவுடன் ரஜினி, கமல் ரேஞ்சுக்கு தன்னை எண்ணிக் கொள்ளாமல் எதார்த்தமான ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பதுதான்  அர்ஜுன் தாஸுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

காரில் பிணமாக கண்டெடுத்த சிறுவன் சாவில் சந்தேகம் கொள்ளும் அர்ஜுன் தாஸ் அதை நூல் பிடித்துச் சென்று அதற்கான தீர்வு தமிழ்நாட்டில்தான் கிடைக்கும் என்று கேரளாவிலிருந்து புறப்பட்டு வருவதும் இங்கு வந்தபின் தமிழ்நாடு போலீஸ் சஞ்சனாவிடம் தனது சந்தேகத்தை சொல்லி புலன் விசாரணையில் இறங்குவது காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது.

ஆக்சன் காட்சிகளில் சஞ்சனா ஓவர்டேக் செய்து செல்லும் நிலையில் அர்ஜுன் தாஸ் பின்தங்கி இருப்பதுபோல் தெரிகிறது ஆனால் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை தக்க வைத்துக் கொள்கிறார் அர்ஜுன் தாஸ்.
பாலத்தின் மீதிருந்து ஏரியில் குதிக்கும் காட்சியில் கூட டூப் இல்லாமல் அர்ஜுன் தாஸ் நடித்திருப்பது அவரது ஈடுபாட்டை, துணிச்சலை காட்டுகிறது.

சஞ்சனா நடராஜன் தடாலடி இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மிரட்டி உருட்டி வேலை வாங்குவது, சிறுவன் காணாமல் போன நிலையில் அவனது அக்கா மீது சந்தேகப்பட்டு சிருஷ்டியை விசாரிப்பது எல்லாமே போலீஸ் புத்தி.

தாயிடம்  முரண்டு பிடிக்கும் மகளாக வருகிறார் சிருஷ்டி. ஒரு கட்டத்தில் அவர் தாயின் அன்பை புரிந்து கொண்டு நடப்பதும் ஆனாலும் போலீஸ் விசாரணையின் போது இடக்கு மடக்காக பதில் பேசி வம்பில் சிக்குவாரோ என்ற படபடப்பையும் ஏற்படுத்துகிறார்.

படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது அத்துடன் இன்னும் பல கதாபாத்திரங்களும் சஸ்பென்சுக்கு துணை நின்றிருக்கிறது. அதையெல்லாம் இங்கு சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும்.. என்னவாக இருக்கும் என்பதை படத்தில் பாருங்கள்..

ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் ஷோபு யர்லகட்ட, பிரசாத் தேவினேனி தயாரிப்பாளர்கள் ஜான்டோ படத்தை தயாரித்திருக் கிறார்கள். விஷயமில்லாமல் இவர்கள் இந்த தயாரிப்பில் இறங்கவில்லை என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது.

மதுமிதா, நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.

முஜீப் மஜீத் இசையமைக்க
கூடுதல் இசை ஆர்டிஸ்ட் 404 அமைத்திருக்கிறார்.
.
பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு தெளிவு. சஸ்பென்ஸ் காட்சிகள் இருள் சூழ்ந்த ஒளியுடன் படமாக்கி இருப்பது கவனம் பெறுகிறது.

இயக்குனர் மதுமிதா தரமான ஒரு சஸ்பென்ஸ் படத்தை கமர்சியலாக மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு கதையாக தந்திருப்பது சபாஷ் போட வைக்கிறது. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தான் விறுவிறுப்பு எகுறுகிறது. அதற்கு முந்தைய காட்சிகளில் உள்ள தொய்வை நீக்க இன்னமும் பத்து நிமிடத்திற்கு மேல் காட்சிகளை வெட்டி எறிந்தால் படம் ஜெட் வேகத்தில் பறக்கும்.

ஜான்டோ என்றால் என்ன என்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அது யார்? கொலைகாரனா, பிள்ளைகளை கடத்துபவனா?, பிணமா? உயிருள்ள நபரா? என்ற கேள்விக்கு படத்தில் விடை கிடைக்கிறது. அதுவும் இங்கு சஸ்பென்ஸாகவே இருக்கட்டுமே..

ஜான்டோ – பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் எச்சரிக்கை மணி.

Review by

k. jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

C V Kumar’s directorial ‘Kottravai’

Jai Chandran

ஒளிப்பதிவு புதிய சட்ட வரைவுக்கு நாசர் எதிர்ப்பு

Jai Chandran

‘இறுதிப்பக்கம்’ இயக்குநரின் புதிய படம் தொடக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend