Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

சிங்காரம் (பட விமர்சனம் )

படம்: சிங்காரம்

நடிப்பு: யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர்,
மரியா வின்சென்ட், சார்ம்ஸ்,
ஆர்த்தி கணேஷ், மனோபாலா
கல்கி, மாரிமுத்து,  படவா கோபி,
சென்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர்

தயாரிப்பு : ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு :பிரசன்னா எஸ். குமார்

இயக்கம்:கே.வி. கதிர்வேலு

பிஆர்ஓ :ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கதை : ஊர் ஒதுக்குப்புறமாக குறவர்கள் குடிசை போட்டு வாழ்கிறார்கள். ஆனால் அந்த ஊரில் உள்ள சிலர் அவர்களை அங்கிருந்து போகும்படி விரட்டுகிறார்கள். ஊர் பெரியவரின் (வேல ராமமூர்த்தி) ஆதரவால் குறவர்கள் அங்கேயே தங்குவதுடன்  அவரின் ஆசியுடன் குறவன் சிங்காரம்  (யோகி பாபு ) தேர்தலில் போட்டியிடுகிறான். அதற்கும் எதிர்ப்பு கிளம்புகிறது இதன்பிறகு நடப்பது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

குறவர்களுக்கும் சக மனிதர்களைப் போல் வாழ உரிமை இருக்கிறது என்பதை சொல்வதுதான் இந்த படத்தின் கரு.. குறவன் சிங்காரம் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். ஆனால் உடல் மொழியிலும் வசனத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போலவே நடித்திருக்கிறார். காஸ்ட்யூம் மட்டும் தான் கொஞ்சம் வேறுபாட்டை காட்டுகிறது.

யோகி பாபுவின் தந்தையாக நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர்  அசல் குறைவ இனத்தவராகவே மாறி இருக்கிறார். உடல் மொழி, உச்சரிப்பு எல்லாமே கனகச்சிதம். படம் தொடங்கி இடைவேளை வரும்போது தியேட்டரில் இருப்பவர்கள் சாமி சாமி என்று கூப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

வழக்கமாக வில்லன் வேடத்தில் வரும் வேல ராமமூர்த்தி இதில் ஊர் பெரியவராக  மரியாதையான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். சென்ராயன் கொஞ்சம் நெகட்டிவ் ஷேடில் வருகிறார்.

70 காலகட்டத்தில் ஜெமினி கணேசன் கே ஆர் விஜயா நடித்த குறத்தி மகன் என்ற ஒரு படம் திரைக்கு வந்தது. அந்தப் படத்திலேயே குறவர்களாக வரும் ஜெமினி,  விஜயா அவர்களின் மகன் பட்டதாரியாக படித்து உலா வருவார் என்று காட்டப்பட்டு இருக்கும். இப்போது 2026. இப்போது கூட குறவுகளின் வாழ்க்கை மாறவில்லை என்று காட்டி இருப்பதைவிட அவர்கள் இன்னும் என்ன விதத்தில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை காட்டி இருந்தால் படம் இன்னும் வரவேற்பு பெற்றிருக்கும். ஏனோ இயக்குனர் கே.வி. கதிர்வேலு சிறிய வட்டத்துக்குள் கதையை சொல்லி இருக்கிறார்.

சாம் சி எஸ் இசையும், பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவும் , ஓகே

சிங்காரம் – சுமார் ரகம்.

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

அமரன் (பட விமர்சனம்)

Jai Chandran

VVS is running successfully in theatres all around the globe

Jai Chandran

Disney+ Hotstar releases the teaser of Goli Soda – The Rising’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend