Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியுடன் தர்மன் படத்தில் மீண்டும் இணைந்தார் நயன்தாரா…

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா – தர்மன் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 ஏற்கனவே ரஜினிகாந்த்துடன் நயன்தாரா, சந்திரமுகி, அண்ணாத்த போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பரிவ்  சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்‌ஷன் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘தர்மன்’, தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.

இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘தர்மன்’ — திரையரங்குகளில் ஒரு பிரம்மாண்ட அனுபவத்திற்கான பயணம் தொடர்கிறது!

Related posts

Hip Hop Tamizha starrer “Anbarivu” Trailer phenomenal response

Jai Chandran

சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் : இளைஞர்கள் வரவேற்பு

Jai Chandran

Teaser of Actor Srikanth’s 10th Class Dairies reaches 1M Views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend