Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அக்டோபர் 30 முதல் எச் ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’

அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகியவற்றையும் வலுவாக எடுத்துரைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்குடன் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Cast & Crew Details:

– எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்
– டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்
– குரு விஜய் – டாக்டர் விஜய்
– தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி
– பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)
– சிதம்பரம் PDK – தங்கதுரை
– மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா
– தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம் (B.Sc), California, USA
கதை / திரைக்கதை / வசனம் / இயக்கம்: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)
ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்
படத்தொகுப்பு: ராஜா முகமது
இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்

Related posts

K.T. Kunjumon heaps praise for Actor Sarath Kumar’

Jai Chandran

வள்ளி மயில்: விஜய் ஆண்டனி படத்தில் கொள்கை பேசும் சத்யராஜ்

Jai Chandran

Vels Film International partnered with Director Vijay

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend