Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

தாய் நிலம் (பட விமர்சனம் )

படம் : தாய் நிலம்

 நடிப்பு: டாக்டர் அமர் ராமச்சந்திரன், பாலா சிங், நேஹா அமர், நிமிஷ நம்பியார், தீபக், பத்மஜா அமர்,

 தயாரிப்பு: நேனி என்டர்டைன்மெண்ட்ஸ்

இசை: அவுசப்பச்சன்

இயக்கம்: அபிலாஷ் ஜி தேவ்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM)

கதை : இலங்கையில் நடந்த போரில் குடும்பத்தையும் மனைவியையும் இழந்த சேதுராமன்  (அமர் ராமச்சந்திரன் ) தன் மகளுடன் இலங்கையில் இருந்து தப்பித்து கடல் வழியாக தமிழகம் வந்து சேர்கிறார். மதுரை பக்கத்தில் ஒரு புறநகர் பகுதியில் வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்து காலத்தை கழிக்க. அவருக்கு அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் உதவுகிறார்கள்   வருமானத்திற்காக காய்கறி விற்கும் தொழில் செய்யும் சேதுராமன் தன் மகள் படிக்க வேண்டும் என்று விரும்பும் போது அவருக்காக என்ன செய்கிறார்? அவரால் வாழ்க்கையை போராடி நடத்த முடிந்ததா? என்பதற்கு உருக்கமான பதில் அளிக்கிறது தாய் நிலம்.

டாக்டர் அமர் ராமச்சந்திரன்  இலங்கை தமிழராக நடிக்க அவரது மகளாக நேஹா அமர் நடித்திருக்கிறார். படம் தொடங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு தந்தை மகளின் வாழ்க்கை போராட்டம் தமிழக மண்ணில் தொடங்கி விடுகிறது

தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் பயன்படுத்தாத பஸ் நிலையத்தை தனது வீடாக இருவரும் பயன்படுத்துவதும், அங்கிருக்கும் பெட்டி கடைக்காரர் பாலாசிங் மற்றும் ஆட்டோக்காரர்கள்  செய்யும் உதவியால் காய்கறி விற்று வாழ்க்கை நடத்தும் காட்சிகள் ஆறுதல் தந்தாலும் மழை வந்தால் தங்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையும் மகளும் தவிக்கும் தவிப்பு வீடு இல்லாத ஜனங்களுக்கு தான் அந்த தவிப்பின் வலி புரியும்

அன்றாடம் இதே நிகழ்ச்சிகள் தான் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பள்ளி ஆசிரியர் நேஹாவை பள்ளியில் சேர்த்துக் கொள்ள சம்மதிப்பது கொஞ்சம் ஆறுதல்..  இவர்களின் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்பதுதான் இந்த படத்தின் விடை தெரியாத கிளைமாக்ஸ் ஆக முடிகிறது.

தாய் நிலம் படத்தைப் பொறுத்தவரை  சினிமாவாக நினைத்து பார்க்க முடியவில்லை புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் பெற்றோரை இழந்து தனி மரமாக நிற்கும் பிள்ளைகளின் அவலம் என்ன என்பதை உணர்த்தும் அந்த கிளைமாக்சின் ஒரு நொடிதான்  மனதை உலுக்கி விடுகிறது

நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

நேனி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது

அவுசப்பச்சன் இசை மௌன நிமிடங்களை நிரப்புகிறது.

இயக்குனர் ஐ வி சசியிடம் உதவி இயக்குனராக  பணிபுரிந்த அபிலாஷ் ஜி தேவ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தந்தை மகளின் வாழ்க்கை போராட்டத்தை எதார்த்தமாக காட்டி இருந்தாலும் சினிமாவாக காட்டுவதால் இன்னும் கூட திரைக்கதை திருப்பங்களை தந்திருந்தால் கூடுதல் பலம் சேர்ந்திருக்கும். இலங்கை போருக்கு பின் மக்களின் வாழ்க்கை எப்படி சிதறிப்போனது என்பதை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

தாய் நிலம் – கை கொடுக்கிறதா? கை விட்டதா? பதில் ரசிகர்களிடம்.

Review By

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

 

Related posts

துருவா நடிப்பில் ஆக்ஷன் – எமோஷனுடன் ” மார்ட்டின்” – அர்ஜூன் பேச்சு

Jai Chandran

ஆர்.ஜே.பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா

Jai Chandran

Amala Paul starrer “The Teacher” trends..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend