Trending Cinemas Now
Uncategorized ஆங்கில செய்திகள் தமிழ் செய்திகள்

அனைத்து இசை அமைப்பாளர்கள் உலக டூர்..

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம் இணைந்து நடத்தும் உலக இசை சுற்றுலா..

தமிழ் திரைப்பட இசை கலைஞர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
மாயா பஜார் நிறுவனம்
தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில்
திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.
இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் சென்னை ஹைதராபாத் குஜராத் சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களில் நடத்தி, அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு அனைத்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் சங்கத்திற்காக இலவசமாக இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி தர முன்வந்துள்ளனர்.
இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதற்காக *தமிழக முதல்வர் ஜோசப் விஜய்* அவர்களிடம் அனுமதி பெற திரை இசை சங்கத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்க தமிழ்த்திரை இசை சங்கம் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மற்றும் மாயா பஜார் ஹப் நிறுவனம் இணைந்து நடத்திய  கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயார் பாடல்கள் சங்கத்தைச் சேர்ந்த தனஞ்செயன், அம்மா கிருஷ்ணன் டி சிவா, இசையமைப்பாளர்கள்  கங்கை வரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, எஸ்ஏ ராஜ்குமார், சிற்பி, பரத்வாஜ், உள்ளிட்ட ஏராளமான இசை அமைப்பாளர்கள், பாடல்கள் சீனிவாஸ், பாடகி மாலதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அவர்கள் பேசும்போது,’ தமிழ் திரைப்பட இசை பாடல் சங்கம் 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பல்வேறு ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் நீ சங்கத்தில் நிர்வாகிகளாகவும் உறுப்பினராகவும் இணைந்து பணியாற்றி உள்ளனர். அவர்கள் போட்ட பாதையில் இன்றுள்ள விவசாயம் பாடல்கள் சின்னத்தில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சங்கத்திற்கு தற்போது உள்ள கட்டிடத்தை புதிய நவீன வடிவில் பத்து அடுக்குகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது  அதற்காக அனைத்து இசையமைப்பாளர்களும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள்” ரீ இன்வென்ஷன் டூர் லான்ச்  மியூசிக் ஆப் தி மில்லனியம் ”  என்ற பெயரில் சென்னை ஹைதராபாத் குஜராத்  நகரங்களில் மற்றும் சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலுமாக 5 இடங்களில் நடக்க உள்ளது. தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்ல, இந்திய திரை உலகில் மட்டுமல்ல உலக அளவில் இசை துறையில் ஒரு அழிக்க முடியாத அடையாளமாக இந்த இசை நிகழ்ச்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்காக அனைத்து இசை கலைஞர்களும், திரைத்துறையினரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளனர் ‘ என்று பேசினார்கள்.

Related posts

தமிழறிஞர் சாலமன் பாப்பையா திடீர் மரணத்தால் அதிர்ச்சி

Jai Chandran

Kaalangalil Aval Vasantham Shoot started with Pooja

Jai Chandran

Oongiadichaondratonweightuda Teaser will Release by Sandy

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend