Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செப் 1முதல் புதிய படம் ரிலீஸ் இல்லை : தயாரிப்பாளர்கள் முடிவால் ரஜினி படத்துக்கு சிக்கல்..

சென்னை ஆகஸ்ட் :
வரும் செப்டம்பர் 1 முதல் தமிழில் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ரஜினி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்தது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்கூறியது :
வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8-வாரம் கழித்து தான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த படங்களை திரையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.

தென்னிந்திய மாநிலங்களில் இப்படியொரு முறை நடைமுறையில் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் புகுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு 250 படங்கள் வெளியாகின்றன. இதில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின் றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த முடிவை தயாரிப்பா ளர்களான எங்களால் ஏற்க முடியது. இதை கண்டித்து செப்., 1 முதல் புதிய படங்களை திரையரங்கு களில் வெளியிடுவதில்லை என்றும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

இதுபற்றி அடுத்தப்படியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்னைக்கு தீர்வு காண உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியாகும் என்ற நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் செப்டம்பர் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் புதிய படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டைலர் 2 படம்  அக்டோபர் 15 ஆம் தேதி  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தமிழ் திரைப்படங்களில் வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டு இருப்பது தியேட்டர் அதிபர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ் திரை உலகில் வேலை நிறுத்தம் தொடங்கினால் அது காலவரையற்ற வேலை நிறுத்தமாக தொடருமா அல்லது அரசு தரப்பில் நடத்தப்படவிருக்கும் சுமுக உடன்பாடில் செப்டம்பருககு முன்பே தீர்வு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருப்பதால் ரஜினிகாந்த் படம் ஜெயிலர் 2 வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யள்ளது.

ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 படம்  தற்போதைய நிலவரப்படி   வரும் அக்டோபர் 15 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Kasethan Kadavulada Shooting Wraps up

Jai Chandran

Vanangaan Is Masterclass Experience To Me – Roshini Prakash

Jai Chandran

அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend