Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மொத ராத்திரி (பட விமர்சனம் )

படம்: மொத ராத்திரி

நடிப்பு: ரிஷிகாந்த், அனிஷ்மா, சேத்தன், ஏ வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, டெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பிரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன்,  கௌஷிக் கபிலன்

தயாரிப்பு: நவீன் எர்ணேனி, அண்டு ஒய் ரவிசங்கர்

இசை: பாரதி சங்கர்

ஒளிப்பதிவு : சுரேந்திரன் பரஞ்சோதி

இயக்ம் : ராஜா கருப்புசாமி

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா  (D’One), நாசர்

 

கதை : துபாயில் இருந்து அவசரமாக வரவழைக்கப்படும் ரிஷிகாந்த்க்கு ஊருக்கு வந்த பிறகு தான் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வருகிறது. இது போல் வேறு ஒருவனை காதலிக்கும் அனிஷ்மாவுக்கு  குடும்பத்தினர் கட்டாயமாக ரிஷிக்காந்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். ஒரு சில கல்யாண கலாட்டாக்கள் நடந்தாலும்  அனிஷ்மா கழுத்தில் ரிஷிகாந்த் தாலி கட்டுகிறார். அதன் பிறகு அனிஷ்மா வேற நபரை காதலிப்பது ரிஷிகாந்துக்கு தெரிகிறது ஏற்கனவே காதலில் தோற்ற ரிஷிகாந்த், அனிஷ்மாவை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க அழைத்துச் செல்கிறார் அதன்பிறகு நடப்பது என்ன என்பதை தான் கிளைமாக்ஸ்.

ரிஷிகாந்த்,  அனிஷ்மா இந்த இருவரும் தொடக்க காட்சிகளில் ஏதோ தமாசாக நடிப்பது போல் தெரிந்தாலும் காட்சிகள் நகர நகர அவர்களது நடிப்பின் கணம் ஆழம் ஈடுபாடு எல்லாமே மனதை உலுக்கி எடுக்கிறது.

வேறு ஒருவனை அனிஷ்மா காதலிக்கிறார் என்று தெரிந்ததும் முதல் ராத்திரியை கேன்சல் செய்துவிட்டு அவரை காதலனுடன் சேர்த்து வைக்க ரிஷிகாந்த் நள்ளிரவில் அழைத்துச் செல்லும்போது  படபடப்பு தொற்றிக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு காட்சியும் மனதுக்குள் உணர்வு அலைகளை  பெருக்கெடுக்க செய்து இதில் யார் செய்வது சரி யார் செய்வது தவறு என்று யூகிக்க முடியாத காட்சிகளாக மாறிவிடுகிறது.

கிட்டதட்ட பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் படத்தின் கிளைமாக்ஸ் எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு திரைக்கதை அமைத்தால் அந்த கதை இப்படித்தான் இருக்கும்  என்று எண்ணவைக்கும் அளவுக்கு மதராத்திரி படத்தின் ஸ்கிரிப்ட் கையாளப்பட்டிருகிறது.

ஊர் மக்கள் யாரும் கண்டு கொள்ளாத  மரத்தடி சாமிக்கு பூசாரியாக இருக்கும் சேத்தன்  ஊர் மக்கள் ஏழைக்காமையை கண்டு கொள்வதில்லை பணக்காரசாமியை பார்க்கத்தான் கியுவில் நிற்கிறார்கள் என்று சாமிக்காக பரிந்து பேசி புலம்பும்போது பல உண்மைகளை உடைத்து விடுகிறார். இவரிடம் ரிஷிகாந்த் அனிஷ்மா ஜோடி  தஞ்சம் அடைந்ததும் அங்கு நடக்கும் உரையாடல்கள் ஒரு பெரும் காதல் போராட்டத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நாயகன் நாயகி என்று மட்டும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கும் ஏ வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, டெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பிரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன்,  கௌஷிக் கபிலன் என அத்தனை கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை என்று சொல்வதற்கு ஏற்ப போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.இத்தனை பேர்களில் ஒருவர் சொதப்பியிருந்தாலும் மொத்த காட்சியுமே நிலைகுலைய செய்திருக்கும் ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாமல் பட்டு துணிக்குள் சன்னமான ஊசி நுழைத்து தைப்பது போல் மிக கவனமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்புசாமி. இன்னும் ஒரு படி கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அந்தக் கால பாக்யராஜ் படத்தை பார்த்தது போன்ற ஒரு நிறைவு முத ராத்திரி படத்தின் கிளைமாக்ஸ் முடியும்போது நெஞ்சில் ஈரமான இடத்தை பிடித்துக் கொள்கிறது.

 இசையமைப்பாளர்  பாரதி சங்கர்   மேளம் நாதஸ்வரம் என இரண்டு இசைக்கருவிகள் மட்டும் படம் முழுவதும் பின்னணியில் இசையாக ஒலிக்க செய்து  அனைவரின் கவனத்தையும் காட்டிக்கொள்ளவே திருப்பி விடுகிறார்.

 ஒரு கிராமத்து வாசலில் இன்று இரண்டு குடும்பங்களின் கதையை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை தரும் வகையில் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன்  பரஞ்சோதி காட்சிகளை எதார்த்தமாக படமாக்கி விருந்து படைத்திருக்கிறார்.

மொத ராத்திரி – 80ஸ், 90’ஸ் காலகட்டத்தை நினைவுபடுத்தி இதுதான் கோல்டன் பீரியட் என்பதை உணர்த்துகிறது.

Review by

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

Related posts

Prabhas, Rana Daggubati Landed In The USA For Project K

Jai Chandran

Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Pan Indian Film

Jai Chandran

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend