Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் கே பாக்யராஜ் மாரடைப்பில் காலமானார்..

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல்  பிற மொழி திரையிலகினரும் திரைக்கதை மன்னன் என்று பாராட்டப்படுபவர்  பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ். மாரடைப்பு காரணமாக இன்று ஜூன் 27ம் தேதி திடீரென்று காலமானார். அவருக்கு வயது 73.  சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை காலமானதாக செய்திகள் வெளியானது. இது தமிழ் திரையுலகை  மட்டுமல்லாமல் பிறமொழி திரையிலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

பாக்யராஜ்  மரண செய்தி தீயாக  பரவியது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக தலைவர் மு. க ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  முதல்வர் விஜய் உள்ளிட்ட ஏராளமான  முக்கியஸ்தர்கள் மலர்மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளங்கோவில் பகுதியில் பிறந்த பாக்யராஜ் சினிமா மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக உயிரிழந்த இயக்குனர் பாரதிராஜாவிடம் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முதன் முதலாக உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், அதேபடத்தில் நடித்திருந்தாலும் அதனைத் தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்திருந்தார். முதன்முதலாக ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பாக்யராஜ் மிகவும் பிரபலமான வசன கர்த்தாவாகவும்  இருந்தார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்

பாரதிராஜா கடந்த 16 நாட்களுக்கு முன்புதான் காலமானார். இந்நிலையில் இன்று கே பாக்யராஜ் மரணம் அடைந்தார். கே பாக்யராஜ் வெகுஜன மக்களை கவரும் வகையில் குடும்ப திரைக்கதைகளை அமைத்து அதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர். எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களிடம் நட்பு பாராட்டியவர். அதிலும் குறிப்பாக எம்ஜிஆரால் கலையுலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Methagu in Bs Value App From June 25th

Jai Chandran

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பட ஃபர்ஸ்ட் லுக்..

Jai Chandran

Dhanush in & as Vaathi /SIR ~ Filming Begins

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend