Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிங் கீதம் (பட விமர்சனம்)

படம் :சிங் கீதம்

நடிப்பு : அய்யன்,  ஹயில்யா பம்ரு,  ஷாலினி கொண்டிபுடி, சிவ நாராயணா நரிபெட்டி, துளசி மற்றும் பலர்

தயாரிப்பு: நாக் அஸ்வின்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: அங்கூர் சஞ்சீவ்

இயக்கம்:சிங்கீதம் சீனிவாச ராவ்

பிஆர்ஓ : யுவராஜ்

 

கதை : குபேரபுரம்  தங்க சுரங்கம் நிறைந்த பகுதி என்பதால் தங்கத்தை வெட்டி எடுக்கிறது ஒரு நிறுவனம். இதனால் பசுமையாக இருந்த அந்த பகுதி பாலைவனம் போல் மாறி விடுகிறது. கடைசி கடைசியாக ஒரேயொரு மரம் மட்டும் அந்த இடத்தில் நிற்கிறது. அந்த இடத்தில் மேலும் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கும் நிலையில் அந்த ஒரு மரத்தையும் வெட்டி  சாய்கிறார் நிறுவன பெண் அதிகாரி. அதை இளைஞன் ஒருவன் தடுக்கமுயன்றும் வேண்டும் முடியாதபோது திடீரென்று ஊர் மக்கள் அனைவரும் வாய் பேச்சு மறந்து எல்லாவற்றையும் பாடல்களாக பாடி பேச வேண்டி நிலை உருவாகிறது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்  நிலையில். இனிமேல் இந்த ஊர் மக்கள் பேச்சை வசனங்களாக  பேசுவார்களா அல்லது நிரந்தரமாக பாட்டு பாடி தான் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்களா என்ற  குழப்பம் ஏற்படுகிறது. பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாட்டு பாடுவது போல் பேச ஆரம்பித்தது ஏன்? அவர்கள் பழைய நிலைக்கு திரும்பினார்களா?  என்பதற்கு  கிளைமேக்ஸ் பதில் சொல்கிறது

மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், மகளிர் மட்டும் போன்ற படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ் தற்போது 94 வயதில் சிங் கீதம் என்ற மாறுபட்ட இசை படம் இயக்கியிருக்கிறார். வயதுதான் 94 ஆகிறதேதவிர அவரது நினைவுக்கு இன்னும் 25 வயது தான் என்று சொல்லும் அளவுக்கு எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கதைக்கள திரைக்கதை அமைப்புடன் பாடலிசை படமாக சிங்கீதம் படத்தை இயக்கி அளித்திருப்பது  எல்லோரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  வெறும் வெட்ட வெளியாக காட்சி அளிக்கும்  குபேரபுரம் பகுதியில்  கதை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கொண்ட அப்பகுதி தங்க சுரங்கம் வெட்டியெடுக்கும் பகுதியாக மாறியதால் அது எல்லாமே வறண்ட பூமியாக மாறி காட்சி அளிப்பது  இது தமிழ் படம் தானா அல்லது ஹாலிவுட் படமா என்று கேட்கும் அளவுக்கு காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில் ஒரே ஒரு மரம் மட்டும் இருப்பது போல் வரும் காட்சியும் கற்பனைக்கு எட்டாதது.

வெட்ட வெளியில் இருக்கும் ஒரே ஒரு ஆலமரத்தை தாய் போல் காக்கும்  கதாநாயகி ஹயில்யா பம்ரு அந்த மரத்தை வெட்ட விடாமல் இருப்பதற்காக நடத்தும் போராட்டம், மரத்தை வெட்டிய பிறகு அப்பகுதியில் இருக்கும் மக்கள் பேசுவதை மறந்து எல்லாவற்றையும் பாடல்களாக பாடத் தொடங்கியதும் படத்தின் போக்கும் கதையின் போக்கும் முற்றிலும் மாறிவிடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள சில நிமிடங்கள் ஆகின்றன. படத்தின் இடைவேளை வரும்போது வெளியே வரும் ரசிகர்கள் பேசுவதை மறந்து பேச்சையே பாடலாக பாடிக்கொண்டு வருவதுதான் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.

பட கதாநாயகனாக அய்யன் நடித்திருக்கிறார். தங்க சுரங்க நிறுவன அதிகாரியாக ஷாலினி கொண்டிபுடி   கெடுபுடி காட்டி  நடித்திருக்கிறார்  மேலும் சிவ நாராயணா நரிபெட்டி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கிளைமாக்சில் பிரசவ சம்பவத்தின் போது அந்த பெண்ணை தொடுபவர்கள்   எல்லோருமே தங்க சிலைகளாக மாறி  மனித கோபுரம் அமைப்பது பிரமிப்பு.

நாக் அஸ்வின்  படத்தை தயாரித்திருக்கிறார்.

குறைந்தபட்சம் ஒரு படத்தில் ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்  இசை அமைப்பார். ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை வசனங்கள் எல்லாமே பாடலாக இருப்பதால் படம் முழுவதுமே இசை அமுதை பொழிந்து ரசிகர்களை இசை மழையில் மூழ்கடிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

அங்கூர் சஞ்சீவ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். ஹாலிவுட் படத்துக்கு இணையாக  காட்சிகளை படமாக்கி இருப்பது இந்த ஒளிப்பதிவாளரை திரையுலகம் திரும்பிப் பார்க்கும்.

சிங்கீதம் சீனிவாச ராவ் 94 வயதில் படத்தை இயக்கி ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

சிங் கீதம் – மாறுபட்ட திரை அனுபவத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்.

Review by

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

Disney+ Hotstar unveils the first look of ‘Fall’

Jai Chandran

ராம்சரண் – உபாசனா பெண் குழந்தைக்கான பெயர்

Jai Chandran

விவசாயம்: அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend