Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அந்தரன்  (பட விமர்சனம் )

படம்: அந்தரன்

நடிப்பு: பிரஜன், இவானா வருண் அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மன்

தயாரிப்பு: எம் கே சாம்பசிவம்

இசை: ஹரி எஸ் ஆர்

ஒளிப்பதிவு :கிஷோர் ராஜேந்திரன்

இயக்கம்: சந்தோஷ் ராவணன்

பி ஆர் ஓ : நிகில் முருகன்

கதை: கார்த்திகா (இவானா ) ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலிக்கிறார். அவரை திருமணம் செய்ய எண்ணும்போது திடீரென்று ஆட்டோ டிரைவர் இறக்கிறார். அதிர்ச்சி அடையும் கார்த்திகாவை அவரது தந்தை ஆறுதல் கூறி தேற்றுவதுடன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அந்த நபரும் விபத்தில் இருக்கிறார். இதேபோல் கார்த்திகாவை திருமணம் செய்ய நினைப்பவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர்  (பிரஜன்) வழக்கை விசாரிக்கிறார்.  ஒரு கட்டத்தில் கார்த்திகா மீது இன்ஸ்பெக்டருக்கு காதல் மலர்கிறது. அவரும் இறக்கிறாரா? அல்லது கார்த்திகாவை மணக்கிறாரா?  என்பதற்கு  படம் பதில் சொல்கிறது.

பிரஜன் மீசையை மழித்துவிட்டு டிப் டாப் போலீஸ் அதிகாரியாக  வருகிறார். வேடப்பொருத்தம் கச்சிதம். கார்த்திகா அதாவது கதாநாயகி இவானா வழக்கை கேள்விப்பட்டதும் ஷாக் ஆகும் பிரஜன் உண்மையிலேயே கார்த்திகாவை காதலிப்பவர்கள் அல்லது திருமணம் செய்ய நினைப்பவர்கள் ஏன் சாகிறார்கள் என்பதை அறிய ஒரு போலீசாக   விசாரணையில் இறங்குகிறார். அதில் சிறு சிறு சஸ்பென்சுகள் வைக்கப்பட்டாலும்  அதிரடி காட்டாமல் இயல்பான வேகத்தை மட்டுமே காட்டுவது  சுவாரஸ்யத்தை குறைக்கிறது.

இவனாவை காதலிப்பவர்கள் திருமணம் எல்லோருமே மர்மமான முறையில் இறக்கிறார்கள் என்பது தெரிந்தும் இவானாவை பிரஜன்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வது அடுத்து இவருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

கதாநாயகி இவானா அப்பாவி முகத்தோடு தனது காதலுக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பது தெரியாமல் போலீஸிடம் தனக்கு நேர்ந்த சம்பவங்களை விளக்கி சொல்லும்போது அடுத்து யார் எப்படி சாகப் போகிறார்கள் என்ற சஸ்பென்சுடன் நகர்கிறது.

எம் கே சாம்பசிவம் படத்தை தயாரித்திருக்கிறார்.  ஹரி எஸ் ஆர்  இசை  படத்திற்கு மேலும் விறுவிறுப்பை  கூட்டி இருக்கலாம். தடாலடி இசை இல்லாததால் சஸ்பென்ஸ் காட்சிகள் கூட மென்மையாக நகர்கிறது.

கிஷோர்  ஒளிப்பதிவு காட்சிகளை  கலர்ஃபுல்லாக பளிச்சிட  வைக்கிறது.

இயக்குனர் சந்தோஷ் ராவணன்  சஸ்பென்ஸ் கதையில் வசனங்களை குறைத்து திரைக்கதையில் மாற்றங்கள் செய்து அதிரடி ஸ்டன்ட் காட்சிகளை வைத்திருந்தால்  விறுவிறுப்பு கூடியிருக்கும்.

அந்தரன்  – ரொமான்டிக்  சஸ்பென்ஸ்.

Review By

K. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

 

 

Related posts

YenadiPenne from Actor Jai’s Yenni Thuniga

Jai Chandran

பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ பட புதிய போஸ்டர்

Jai Chandran

இயக்குனர் தங்கர் பச்சான் விளக்க அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend