Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹபீபி (பட விமர்சனம் )

படம்: ஹபிபீ

நடிப்பு: கஸ்தூரி ராஜா,  ஈஷா, மாளவிகா மனோஜ், தனுஸ்ரீ, அனுஸ்ரீய ராஜன், ஜெய் ஸ்ரீ  பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன்,  இஷ்மத் பானு,, மலர் கைசன், சன் சாகுல், மாஸ்டர் தீரன்

தயாரிப்பு: சாகுல் ஹமீத் கோவை இப்ராஹிம்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி

இயக்கம்: மீரா கதிரவன்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா  (D ‘One)

 

தமிழ் திரைப்படத்தில் இது  வித்தியாசமான முயற்சி  வழக்கமாக திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவார்கள் அல்லது பிரியாணி செய்பவராக, ஒரு சில படங்களில் நல்லவர்களாக காட்டுவதும் உண்டு. இந்தப் படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வாழ்வியலை அப்பட்டமாக சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது.

கதை : நெல்லை மாவட்டம் கடையநல்லூரில்  பாரம்பரிய முறைப்படி நெசவு தொழில் செய்பவர் யூசுப்  (கஸ்தூரி ராஜா ). நவீன இயந்திரங்கள் வருகையால் பாரம்பரிய நெசவுத் தொழில் பாதிக்கப்படுகிறது   ஆனாலும் பழைய முறைப்படிதான் நெசவு செய்வேன் என்று யூசுப் பிடிவாதமாக இருக்கிறார். தன் மகன் அபுதாஹிர்  ( ஈஷா ) தன் தொழிலை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் அபுதாஹிற்கு  தன் காதலியை மணக்க வேண்டும்,, வெளிநாடு சென்று கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இது முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது

படத்தின் கதை ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும் இஸ்லாமியர்களின் திருமண சடங்குகள் தொடங்கி ஜனாஸா தொழுகை, சுன்னத், தொழுகைக்கு ‘உளூ’ செய்வது, பாங்கு சொல்வது வரை அனைத்தும் நேர்த்தியாக இப்படத்தில் சொல்லப்பட்டி ருப்பது சிறப்பு அம்சம்.

90 களுக்கு முன்பு வெளிநாடு சென்று சம்பாதிப்பது என்பது முஸ்லிம் குடும்பத்தில் ஒரு முடிவாகவே இருந்தது அப்படி வெளிநாடு சென்றவர்கள் ஏராளமானவர்கள்..  அவர்களின் அந்த வாழ்க்கையை எதார்த்தமாக இயக்குனர் மீரா கதிரவன்  அழகுற பதிவு செய்திருக்கிறார்.

யூசுப் என்ற இஸ்லாமிய நெசவு தொழிலாளி கதாபாத்திரத்தில் இயக்குனர் கஸ்தூரி  ராஜா நடித்திருக்கிறார் என்பதை விட அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம். இந்த படத்தில் ஒருவருக்கு விருது தர வேண்டுமென்றால் அதை கஸ்தூரி ராஜாவுக்கு தயங்காமல் தரலாம்.

பர்தா அணிந்தபடி பெரியாரியம், கம்யூனிசம் பேசும் பெண்ணாக வரும் தனஸ்ரீ சுதாகரன் கவனத்தை ஈர்க்கிறார்.

மாளவிகா மனோஜுக்கு பெரிதாக வசனம் எதுவும் இல்லை.  க்ளைமாக்சில் ஓரளவுக்கு சோபிக்கிறார் அபுதாஹிராக வரும்  ஈஷா அலட்டால் இல்லாத எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இயல்பான படம் என்பதால் கமர்சியல் வேல்யூ எதுவும் இல்லை. இஸ்லாமியர்களின் வாழ்வியலை நேர்மையாக பதிவு செய்ய வேண்டும் என்ற இயக்குனர் மீரா கதிரவனின் முயற்சி உண்மையாக வெளிப்பட்டிருக்கிறது.

சாம் சி எஸ்  வித்தியாசமான அனுபவத்தை இசையில் தந்திருக்கிறார். கேமராமேன் மகேஷ் முத்துசாமி இஸ்லாமிய குடும்பங்களுக்குள் நம்மை இழுத்துச் சென்று அமர்த்தி விடுகிறார்.

ஹபீபி – பெரிதாக அரசியல் எதுவும் பேசாத இயல்பான இஸ்லாமிய வாழ்வியல்.

 

Review by

க். Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

Related posts

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு தாதா சாகேப் விழாவில் விருது

Jai Chandran

First Look Poster of Natty’s #WEB

Jai Chandran

கேன்ஸ் திரைப்பட விழாவில் மிரட்டிய “தாழ் திறவா”..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend