Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பரிமளா அண்ட் கோ  (பட விமர்சனம் )

படம் : பரிமளா அண்ட் கோ

நடிப்பு: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு,  சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி  அனந்திகா சரத்குமார்  ஜி கே எம் தமிழ் குமரன், பூர்ணிமா

தயாரிப்பு: சுபாஷ்கரன், ஜி கே எம் தமிழ்க்குமரன், பாண்டிராஜ்

இசை: பாக்சன்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

இயக்கம் : பாண்டிராஜ்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM)

 

கதை :நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பரிமளா (ஜெயராம்) சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிகள் தங்களது இரண்டு பெண் பிள்ளைகளுடன் அன்றாட நடுத்தர வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.  இவர்களது இரண்டாவது மகளை மீனவ குப்பத்தில் இருக்கும் இளைஞன்  வம்புக்கு இழுத்து காதலிக்கும்படி வற்புறுத்துகிறான். இதை தனது பெற்றோரிடம் சொல்கிறாள் மகள். குப்பத்து இளைஞரின் தொல்லை அதிகரிக்கவே அவனை கொன்று விடலாம் என்று இந்த குடும்பம் யோசிக்கிறது. திடீரென்று ஒரு நாள் இளைஞர் கொல்லப்படுகிறான். அவனை கொன்றது யார் என்ற மைய புள்ளியை வைத்து காமெடி கலந்த க்ரைம் கதையாக படம் கிளைமாக்ஸ் நெருங்குகிறது.

ஜெயராம் நொடிக்கு நொடி  செய்யும் அஷ்ட கோணல் சேட்டைகள் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும் அவருடன் காமெடி குயின்  ஊர்வசியும் சேர்ந்தால்  தியேட்டர் அல்லோகல்லப்பட்டுத்தான் போகும் என்பது பல்வேறு சீன்களில் நிரூபிக்கப்படுகிறது.

யாராவது தப்பாக பேசினல் ஜெயராம் பல்லை கடிப்பதும் அதைக் கண்டு ஊர்வசி திருட்டு முழி முழிப்பதும் அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சிரிப்புக்கு தடை போடவில்லை.

தனது அக்கா  சாவுக்கு செல்லும் ஜெயராம் அங்கிருந்தபடி செல்போனில் ஊர்வசியை அழைத்து மகள்களுடன் சாவு வீட்டுக்கு வரும்படி சொல்வதும்  உலக  நியதிப்படி ஒரு மனைவி கணவரின் குடும்பத்தை குறிப்பாக அக்கா தங்கை யாராவது இருந்தால் அவர்களை எப்படி நக்கல் நையாண்டி செய்வார்கள் என்பதை ஊர்வசி அணுவும் பிசகாமல் நடித்து காட்டியிருப்பது கோபமாக இருக்கும் குடும்ப உறவுகள் கூட  கலகலப்பு குடும்பமாக மாறிவிடும்.

மகள்களாக நடித்திருக்கும் சஞ்சனா,, அனந்திகா நிஜ அக்காள் தங்கையாக  மாறி இருக்கிறார்கள்  வீட்டுக்குள் இருவரும் கீறியும் பாம்புமாக சண்டை போட்டுக்கொள்வதும் தங்கைக்கு ஒரு தொல்லை வந்தால் அதை தட்டி கேட்கும் சிங்கப் பெண்ணாக சஞ்சனா மாறுவதும் ரசிக்க முடிகிறது.

தொல்லை கொடுத்து வந்த குப்பத்து இளைஞன் சாண்டி  திடீரென்று கொல்லப்பட்டவுடன் அந்த கொலையை செய்தது நீதானே நீதானே என்று  ஜெயராம் குடும்பத்தினர் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வதும், போலீசை பார்த்தவுடன் டர்ராவதும் இலவச இணைப்பாக கிடைக்கும் காமெடிகள்.

படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு கதாபாத்திரம் இன்ஸ்பெக்டராக வரும் மிஷ்கின். குண்டான உடம்பும் மிரட்டும் கண்களையும் வைத்துக்கொண்டு அவர் சைலண்டாக செய்யும் காமெடிகளும் நமட்டு சிரிப்பை வரவழைக்கிறது.

ஜி கே எம் தமிழ்க்குமரன் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார். பல நேரம் வெறுமனே நின்றாலும் அவ்வப்போது நடிக்கிறார். பக்ஸ் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்

குடும்பபாங்கான படங்களையே எடுத்து மக்கள் மனதில் குடும்ப இயக்குனர் என்று தன்னை பதிய வைத்திருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை முழுக்க முழுக்க கே.பாக்யராஜ் பாணியில் இயக்கியிருக்கிறார். பாக்யராஜ் ஒரு திரைப்படம் எடுத்தால் அது எப்படி விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் என்பதை இந்த படத்தில்  பாண்டிராஜ் நிரூபித்திருக்கிறார்

பாக்சன் இசை ஓகே ரகம்  ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு நார்மல்.

பரிமளா அண்ட் கோ  – கோடை காலத்திற்கு ரிலாக்ஸான காமெடி படம்.

Review by

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

தடகள வீரர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Jai Chandran

மாரி செல்வராஜின் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

Jai Chandran

Communist Party leader playing as former in Arisi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend